இல்லத்தரசிகளுக்கு அடித்த ஜாக்பாட்... குடும்ப வாக்குகளை மொத்தமாக தூக்க சலுகை மழை பொழியும் கட்சிகள்!
சென்னை: ஏற்ற, தாழ்வுகளை தாங்கி குடும்பத்தை வழிநடத்துவதில் பெண்களுக்கு நிகர் யாரும் இல்லை. ஆகவே குடும்ப தலைவிகள் மனதில் இடம் பிடித்து விட்டால் அந்த குடும்பத்தின் வாக்குகளை எளிதில் பெற்று விட முடியும் என்று கட்சிகள் கணக்கு போடுகின்றன.
இந்த கணக்குகளை மனதில் வைத்தே தற்போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஊக்கத்தொகை என்று பல அறிவிப்புகளை சலுகை மழையாக பொழிந்து வருகின்றன அரசியல் கட்சிகள்.
பெண்களுக்கான சலுகைகள் அரசியல் கட்சிகளுக்கு கை கொடுக்குமா? அல்லது கைவிடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தேர்தல் பணிகள் தீவிரம்
தமிழக தேர்தல் களம் வாக்குப்பதிவு நாளை நோக்கி ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. பிரதான கட்சிகள் ஏறக்குறைய தொகுதி பங்கீட்டு உள்ளிட்ட பணிகளை முடித்து அடுத்தக்கட்டமாக தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு ஆயத்தமாகி விட்டது. பொதுவாக ஒரு தேர்தலில் ஆளுங்கட்சியானால் தாங்கள் நிறைவேற்றிய திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறியும், எதிர்கட்சியானால் ஆளும் கட்சியின் குறைகளை கூறி வாக்குகளை சேகரிப்பது வழக்கம்.

தேர்தல் அறிக்கை என்னும் மந்திரம்
வாக்குகளை கவர கட்சிகளுக்கு இது ஒரு பெரும் பலம் என்றால், தேர்தல் அறிக்கைதான் ஓட்டுகளை அறுவடை செய்வதில் பெரும் பங்கு வகிக்கும். அந்த வகையில் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு குறிப்பிட்ட திட்டங்களை முன்வைத்து வாக்குகளை இழுப்பார்கள். கடந்த தேர்தகளில் எல்லாம் தமிழகத்தில் மதுவை வைத்து காய் நகர்த்தினார்கள். ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை ஒழிப்போம்'' ''மதுக்கடைகளுக்கு கட்டுப்பாடுகளை விதைப்போம்'' என்று மதுவை முன்னிலைப்படுத்தி வாக்குறுதிகள் கூறினார்கள்.

குடும்ப தலைவிகளுக்கு சலுகை மழை
ஆனால் இந்த தேர்தலில் பிரதான கட்சிகளிடம் மது ஒழிப்பு என்ற ஒரு பேச்சே இல்லமால் பொய் விட்டது. இந்த தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்ய கட்சிகள் வைத்துள்ள குறி குடும்ப தலைவிகள். ஒரு குடும்பத்திற்கே ஆணி வேர் அந்த வீட்டை வழிநடத்தும் பெண்கள் ஆவர். ஏற்ற, தாழ்வுகளை தாங்கி குடும்பத்தை வழிநடத்துவதில் பெண்களுக்கு நிகர் யாரும் இல்லை. ஆகவே குடும்ப தலைவிகள் மனதில் இடம் பிடித்து விட்டால் அந்த குடும்பத்தின் வாக்குகளை எளிதில் பெற்று விட முடியும் என்று கட்சிகள் கணக்கு போட்டன.

தொடங்கி வைத்த கமல்ஹாசன்
இந்த கணக்குகளை மனதில் வைத்தே தற்போது பெண்களுக்கான சலுகை மழையாக பொழிந்து வருகின்றன அரசியல் கட்சிகள். பெண்களுக்கு குறிவைக்கும் வாக்குறுதிகளை முதலில் அறிமுகப்படுத்தியவர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை தோகை வழங்கப்படும் என்று அறிவித்தார். இது என்ன வித்தியாசாமான அறிவிப்பாக இருக்கிறது என்று ஆதரவு கருத்தும், எதிர்க்கருத்தும் வந்தன.

ஆளுங்கட்சியின் அதிரடி அறிவிப்பு
இதனை தொடர்ந்து திமுக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 என்று அறிவித்தது. மக்கள் நீதி மய்யம் அறிவித்த அதே அறிவிப்புதான். என்ன ஊக்கத்தொகை மட்டும் உரிமைத் தொகையாக மாறியது. எதிர்க்கட்சியே அறிவிக்கும்பொது ஆளுங்கட்சி சும்மா இருக்குமா? அடுத்து அதிமுக ஆட்சியை தக்க வைத்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்று அறிவித்தார் முதல்வர். இது மட்டுமா? ஆண்டுக்கு 6 சமையல் சிலிண்டர்கள் இலவசம் என்று ஒரே போடாக போட்டார்.

கட்சிகளுக்கு கை கொடுக்குமா?
தற்போது சமையல் சிலிண்டர் விலை தாறுமாறாக உயர்ந்து இல்லத்தரசிகள் புலம்பி கொண்டிருக்க, அவர்களின் மனது குளிரும் வகையில் அதிமுக அறிவிப்பு உள்ளது. இவ்வாறு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தேர்தலில் தடம் பதிக்க காத்திருக்கும் கட்சி என அனைத்து கட்சிகளும் பெண்களை குறிவைத்தே காய் நகர்த்தி வருகின்றன. ஒரு குடும்பத்தில் 6 பேர் என்றால் அந்த குடும்பத்தின் மற்ற 5 பேரும், குடும்ப தலைவி செயல்பவர்களுக்கே ஒட்டுப் போட வாய்ப்பு அதிகம். இதை கட்சிகள் நன்கு புரிந்து வைத்துள்ளன. இதனை மனதில் கொண்டே இல்லத்தரசிகளுக்கு சலுகை மழை பொழிந்து வருகின்றனர். பெண்களுக்கான சலுகைகள் அவர்களுக்கு கை கொடுக்குமா? அல்லது கைவிடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications