பிரார்த்தனையில் மூழ்கிய பெண்.. பின்னாலிருந்து திடீரென.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போதகர் கைது
சென்னை: ஆவடி அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போதகரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
Recommended Video
சென்னை ஆவடி அடுத்த மோரை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்காட் டேவிட் (53). இவர் அதே பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் போதகராக உள்ளார்.

இவருக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஆரிக்கம்பேடு, சாலோம் நகரைச் சார்ந்த 48 வயது பெண் ஒருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. அப்போது, அந்த பெண் தனது குடும்ப கஷ்டங்களை டேவிட்டிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று ஜெபம் செய்து வந்துள்ளார் டேவிட். மேலும், அந்த பெண்ணிடம், "எங்களது சர்ச்சுக்கு வந்து பிரார்த்தனை செய்தால் உங்கள் கஷ்டம் தீரும்" எனக் கூறி உள்ளார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த கிறிஸ்துவ ஆலயத்திற்குத் தனியாகச் சென்று உள்ளார். அங்கு, அவர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, ஸ்காட் டேவிட், அவரை பின்னால் வந்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சத்தம் போட்டு அலறியடித்து அங்கிருந்து வெளியே ஓடி வந்துள்ளார்.

மேலும், இது குறித்துப் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் கிறிஸ்தவ போதகர் ஸ்காட் டேவிட்டை கைது செய்தனர். மேலும், அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications