ஹாரன் அடிப்பதை குறைக்கணும்! 10 லட்சம் கையெழுத்து இலக்கு! சவுமியா அன்புமணியின் மெகா திட்டம்!
சென்னை: ஒலி மாசுபாட்டினை குறைக்கும் வகையில் ஹாரன் அடிப்பதை பொதுமக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி காலநிலை மாற்றம் தொடர்பாக 10 லட்சம் கையெழுத்து பெறும் இயக்கத்தை சவுமியா அன்புமணி சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் ஹாரன் அடிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்தெல்லாம் பேசினார். அதன் விவரம் வருமாறு;

''உலகின் வளர்ந்த 20 நாடுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவித்துள்ளன அதே நேரத்தில் அவை தற்போது நல்ல பொருளாதார நிலையில் உள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகளால் சுற்றுச்சூழலுக்கு அதிக அளவில் பாதிப்பு இல்லை அதே நேரத்தில் இங்குள்ள மக்கள் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்த அந்த 20 நாடுகள் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு நிதி மற்றும் நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். சென்னை மாநகராட்சியில் மழைநீர் கால்வாய் தோண்டும்போது ஆங்காங்கே வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக மீண்டும் மரங்கள் நடப்பட வேண்டும். ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு மாற்றாக 100 மரங்கள் நட வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவை சுற்றுச்சூழலுக்காக பல்வேறு குழுக்களை அமைத்திருக்கிறார்கள் அந்த குழுக்களின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை இன்னும் அந்த குழுக்கள் பணிகளை தீவிர படுத்த வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு பொதுமக்கள் ஒலி மாசுபாட்டினை குறைக்கும் வகையில் ஹாரன் அடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
பெட்ரோல் டீசல் நிலக்கரி போன்ற புதை படிவ எரிபொருள்களை பயன்பாட்டை குறைத்து மாற்று எரிபொருளை பயன்படுத்த அனைவரும் முன்வர வேண்டும். இதனை தனி மனிதன் மட்டுமே நினைத்தால் சாத்தியப்படுத்த முடியாது மத்திய மாநில அரசுகள் இணைந்து புதிய திட்டங்களை வகுக்க வேண்டும்.
2040 ஆம் ஆண்டுக்குள் அனல் மின் நிலையங்களை மூடுவோம் என இந்திய அரசு உள்ளிட்ட உலக நாடுகள் சொல்லி இருக்கிறார்கள் ஆனால் இதுவரையில் அதற்கான முன்னெடுப்பு எதுவும் எடுக்கப்படவில்லை.''












Click it and Unblock the Notifications