Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேரதிர்ச்சி தரும் தகவல்.. சென்னையில் தண்ணீரும் பிரைவேட் ஆகிறதா? பசுமைத் தாயகம் வெளியிட்ட ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தண்ணீர் சென்னையில் தனியார்மயம் ஆகப்போவதாக பசுமைத் தாயகம் அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு இருக்கிறது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் அறிவிப்பில், "உலக வங்கி & மத்திய அரசின் நிபந்தனைக்கு கட்டுப்படும் தமிழ்நாடு அரசு, தனியார்மயமாக்கல் குறித்து சட்டமன்றத்திலோ, மாநகராட்சி கூட்டத்திலோ விவாதிப்பது இல்லை!

Pasumai Thayagam said water is to be privatized in Chennai

தண்ணீர் ஒரு அடிப்படை மனித உரிமை. சென்னை மாநகரில் தண்ணீரை தனியார்மயமாக்கும் பணியை தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, சென்னையின் குப்பை அகற்றல் பணியை தனியார்மயமாக்கினார்கள். அடுத்து சென்னை MTC மாநகரப் பேருந்துகளையும் தனியார்மயமாக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

பின்னணி என்ன?: தமிழ்நாடு அரசின் Chennai City Partnership எனும் திட்டத்துக்காக 300 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 2400 கோடி) கடன் அளிக்க உலக வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தமிழ்நாடு அரசுக்கும் உலக வங்கிக்கும் இடையே 29.11.2021-இல் கையொப்பம் இடப்பட்டது. (அப்போது அதிமுக ஆட்சி நடக்கவில்லை.)

உலக வங்கி நிபந்தனைப்படி - குடிநீரையும் பேருந்துகளையும் தனியாருக்கு கொடுக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது. இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கோ, மாநகராட்சி உறுப்பினர்களுக்கோ எந்த விவரமும் தெரிவிக்கப்படுவது இல்லை. மக்களுக்கும் விளக்கிச் சொல்லப்படுவது இல்லை.

அரசு வழங்க வேண்டிய அடிப்படை சேவைகளை தனியாருக்கு அல்லது வெளி நிறுவனங்களுக்கு அளிக்கும் இத்தகைய தனியார்மய திட்டங்களுக்கு உலக வங்கி மறைமுகமான பெயர்களை சூட்டுகிறது. பேருந்துகளை தனியார்மயமாக்குவதை "Gross Cost Contract - GCC" என்றும், தண்ணீரை தனியார்மயமாக்குவதை "Performance-Based Contract - PBC" என்றும் குறிப்பிடுகின்றனர்.

MTC பேருந்து, மெட்ரோ வாட்டர் போன்ற தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களை படிப்படியாக வெளியேற்றி, அவற்றில் தனியாரை நுழைய வைப்பதுதான் இதன் உண்மை நோக்கம் ஆகும். Gross Cost Contract - GCC முறையில் 1000 தனியார் மூலம் பேருந்துகளை இயக்க MTC நடவடிக்கை எடுத்துவருகிறது. "Performance-Based Contract - PBC" முறையில் கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களில் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் திட்டத்துக்கு WATCO எனும் ஒரிசா நிறுவனத்தை நியமித்துள்ளனர்.

இந்த இரண்டு திட்டங்களும் உலக வங்கியின் கட்டாயமான நிபந்தனைகளாகும் அதாவது, பேருந்துகள் இயக்கத்திலும் தண்ணீர் விநியோகத்திலும் தனியார் அல்லது வெளி நிறுவனங்களை அனுமதித்தால்தான் உலக வங்கி அளிக்கும் ரூ. 2400 கோடி பணம் கிடைக்கும்!

Pasumai Thayagam said water is to be privatized in Chennai

தீர்வு என்ன?: 'பேருந்துகள், குடிநீர் வழங்கல், குப்பை அகற்றுதல், மின் விநியோகம், பொது மருத்துவமனைகள் என பொதுச்சேவைகள் எதையும் அரசு இயக்கக் கூடாது. அவற்றை தனியாரிடம் விட்டுவிட வேண்டும்' என்பது உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் (IMF), மத்திய அரசின் நித்திஆயோக் அமைப்பும் திணிக்கும் தனியார்மயமாக்கல் கொள்கை ஆகும்.

இந்த நவீன காலனியாதிக்க கொள்கையை (Neo-colonialism) மத்திய அரசு நிறுவனங்களில் திணிக்கும் போது எதிர்ப்பதும், அதையே மாநில அரசு நிறுவனங்கள் ஏற்கும் போது நியாயப்படுத்துவதும் தமிழக அரசின் வழக்கமாக உள்ளது! இந்த அவலநிலை மாற வேண்டும். உலகெங்கும் பொதுச் சேவைகளை அரசு நிறுவனங்கள்தான் சிறப்பாக வழங்குகின்றன.

இவற்றை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் திறம்பட வழங்கும் என்பது கட்டுக்கதை. குறிப்பாக, கோவிட் 19 பாதிப்புக்கு பின்னாலான காலத்தில் அரசுத்துறைகள் தான் பொதுச்சேவைகளை முறையாக வழங்க முடியும் என்பது தெளிவாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நகரங்கள், இதற்கு முன்பு தனியார்வசம் சென்ற பொதுச்சேவைகளை தற்போது பொதுத்துறைக்கு (Remunicipalisation) கொண்டுவந்துள்ளன.

எனவே, உலக வங்கி உள்ளிட்ட பன்னாட்டு நிதி அமைப்புகள் மற்றும் மத்திய அரசின் நித்திஆயோக் அமைப்புகளின் நிபந்தனைகளை ஏற்று பேருந்து சேவை, குடிநீர் வழங்கல், குப்பை அகற்றுதல், மின் விநியோகம், பொது மருத்துவமனைகள் என பொதுச்சேவைகள் எதையும் தமிழ்நாடு அரசு தனியார்மயம் ஆக்கக் கூடாது.

பொதுச்சேவைகள் எதையும் தனியார்மயம் ஆக்க மாட்டோம் என்கிற உறுதியான கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும். அவ்வாறு மாற்றப்பட்ட குப்பை அகற்றுதல், குடிநீர் விநியோகம் போன்றவற்றை Remunicipalisation முறைக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+