Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டா மாறுதல் செய்யணுமா? அப்ப கட்டணம்? சொத்து அபகரிப்பை தடுக்க தமிழக அரசு எடுத்த சூப்பர் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியமாகும்.. இதற்கான வசதியை அரசு செய்துள்ள நிலையில், பட்டாவை ஆன்லைனில் எளிதாக எப்படி பெறுவது தெரியுமா? இதற்கான கட்டணம் எவ்வளவு? பட்டா சிட்டாவில் பெயர்களையும் ஆன்லைனில் மாற்ற முடியுமா? சொத்து அபகரிப்பு மோசடிகளை தடுக்க அரசு மேற்கொண்டுள்ள புதிய அதிரடி என்ன தெரியுமா? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

பொதுவாக, நிலப்பட்டா வாங்க வேண்டுமானால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரிலேயே செல்ல நேரிடும்.. இதற்காக நேரம் விரயமாகும். இடைத்தரகர்களின் தொல்லையும் அதிகமாக இருக்கும். எனவேதான், ஆன்லைனிலேயே தமிழ் நிலம் என்ற வெப்சைட்டை தமிழக அரசு துவங்கியிருக்கிறது.

patta change registration department revenue department

ஆன்லைனில் வசதிகள்

அதன்படி, ஒருவருக்கு சொத்து பதிவு செய்யப்படும்போது, வருவாய் துறை மூலமாக, பட்டாவும் பெயர் மாற்றம் செய்ய முடியும்.. பழைய பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்யாதவர்கள், ஏற்கனவே பத்திரப்பதிவு செய்தவர்களும் ஆன்லைனில் இதற்காக விண்ணப்பிக்கலாம். அதேபோல, இடம் அல்லது வீடு வாங்குவோரும் ஆன்லைனில் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

பட்டாவில் நிலத்தின் சொந்தக்காரர் யார்? நிலத்தின் சர்வே எண்? நிலம் எந்த வகையை சேர்ந்தது? எந்த பகுதியில் அமைந்துள்ளது? என்பனவற்றையும் அறிந்து கொள்ளலாம்.

எந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் தேவையோ, அது உட்பிரிவற்ற பட்டா மாற்றமா அல்லது உட்பிரிவுடன் பட்டா மாற்றமா? என்பதை விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும்... அந்தவகையில், தமிழ்நிலம் வெப்சைட்டில் எப்படி பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் தெரியுமா?

தமிழ் நிலம் - பயன்பாடுகள்

https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற அரசின் வெப்சைட்டிற்குள் நுழைந்து, பெயர், போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட வேண்டும். பிறகு மொபைல் நம்பர், ஐடி , பாஸ்வேர்டு தந்து உள்ளே நுழைந்து, உட்பிரிவு இல்லாத நிலம், உட்பிரிவு உள்ள நிலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

அப்படி விண்ணப்பிக்கும்போது, பாகப்பிரிவினை பத்திரம், தானப் பத்திரம், கிரையப் பத்திரம், செட்டில்மென்ட் பத்திரம், விடுதலைப்பத்திரம், பரிவர்த்தனை பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் அவசியமாகும்.. இதைத்தவிர, விண்ணப்பதாரரின் அடையாள சான்று (ஆதார், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ்), குடியிருப்பு சான்றிதழ் போன்றவற்றை டாக்குமெண்ட் வடிவில் அப்லோடு செய்ய வேண்டும்.

பட்டா மாறுதலுக்கு கட்டணம் எவ்வளவு

பத்திரப்பதிவு செய்ய உட்பிரிவுக்கு ரூ. 600 கட்டணமாகும்.. உட்பிரிவு இல்லாவிட்டால் ரூ. 60 கட்டணமாகும்.. கட்டணம் செலுத்தியதும், விண்ணப்பதாரரின் போனுக்கு பட்டா மாறுதல் தொடர்பாக விண்ணப்பித்தது குறித்து தகவலை தெரிவித்து, வருவாய்த் துறை அலுவலர்களால் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என எஸ்எம்எஸ் வரும். பிறகு ஒரு வாரத்திற்குள்ளேயே பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும்.. இதனை ஆன்லைனில் டவுன்லோடும் செய்தும் கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் பட்டா பெற வேண்டுமானால், செல்போன் எண் கட்டாயம்.. பட்டா மட்டுமல்ல, பட்டா, சிட்டா, பட்டா நகல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெற செல்போன் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இசேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்

இசேவை மையத்திலும் விண்ணப்பித்து பட்டா பெயர் மாற்றம் செய்யலாம்.. தேவையான ஆவணங்கள், பட்டா மாறுதலுக்காகும் கட்டணம் செலுத்திய ரசீது உள்ளிட்ட நகல்களுடன் விஏஓ அலுவலகத்தை அணுகலாம்..

செட்டில்மென்ட் பத்திரம், கிரையப் பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம், தானப் பத்திரம், பரிவர்த்தனை பத்திரம் அக்குவிடுதலைப் பத்திரம் ஆகிய 6 பத்திரங்களில் உங்களுக்கான பத்திரம், வில்லங்க சான்றிதழ், ஏற்கனவே பட்டா யார் பெயரில் இருந்ததோ அந்த பத்திரம், ஆதார் கார்டு, முகவரி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், போன்றவைகளுடன் இசேவை மையத்தில் பட்டா மாறுதலுக்கு விண்ணபிக்கலாம். இதில் விண்ணப்பிக்கும்போது, தேவைப்பட்டால் மட்டும் இறப்பு சான்றிதழ் தரவேண்டும்.

பட்டா, சிட்டா

அதேபோல, பட்டா சிட்டாவில் பெயர்களை மாற்ற முடியும் என்றாலும், அதனை ஆன்லைனில் செய்ய முடியாது.. தாலுகா அல்லது விஏஓ ஆபீசில்தான், இதற்கென பட்டா பரிமாற்ற படிவத்தை வாங்கி, விண்ணப்பிக்கலாம்.

இப்போதெல்லாம், பத்திரப்பதிவு, கட்டிட அனுமதி போன்ற பல்வேறு பணிகளின்போது, சம்பந்தப்பட்ட சொத்துக்கான பட்டா சரியாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.. எனவேதான், பட்டா, ஆவணங்களும் முழுமையாக சரிபார்க்கப்படுகின்றன.

சர்வே எண் - மோசடி அபகரிப்பு

ஒரு சொத்துக்கான பட்டா, யார் பெயரில் உள்ளது என்று மட்டுமே பொதுமக்கள் பார்க்கிறார்களே தவிர, அந்த சொத்து எந்தெந்த காலத்தில் எத்தனை பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதையும், கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

பட்டா, நில அளவை வரைபடம் போன்றவற்றை, ஆன்லைன் வழியே அறிந்தால், மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே எண், உட்பிரிவு எண் போன்ற விபரங்களை அளித்தால், கடைசியாக வழங்கப்பட்ட பட்டா தொடர்பான விபரங்கள் மட்டுமே கிடைக்கும். இந்த குறிப்பிட்ட சர்வே எண்ணில், இதற்கு முன் வழங்கப்பட்ட பட்டாக்கள் தொடர்பான விபரங்கள் தெரியவந்தால், சொத்து அபகரிப்பு மோசடிகளை தடுக்கலாம் என்கிறார்கள்..

மாதிரிகள் தயாரிக்கும் பணி

சொத்துக்களுக்கு சர்வே எண், உட்பிரிவு எண் அடிப்படையில், முந்தைய பத்திரப்பதிவு விபரங்கள், வில்லங்க சான்றிதழாக பதிவுத்துறையில் வழங்கப்படுவதைபோல,முந்தைய பட்டா மாறுதல் விபரங்களை அறிக்கையாக மக்களுக்கு வழங்க, வருவாய் துறை முடிவு செய்துள்ளதாம்.. வருவாய் துறையின் மானிய கோரிக்கையின்போது, சட்டசபையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதுதொடர்பான மாதிரிகள் தயாரிக்கும் பணிகளும் தற்போது நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+