நிலத்தின் பட்டா பார்க்கலாம்னு "தமிழ் நிலம்" திறந்தால்? OTP, அ பதிவேடு மிஸ்ஸிங்! வருவாய்த்துறை பதில்?
சென்னை: நிலத்தின் சர்வே எண், பட்டா, வரைபட விபரங்களை, மக்கள் எளிதாக அறிவதற்காகவே துவங்கப்பட்டதுதான் tamilnilam என்ற செயலி.. பல்வேறு விவரங்களை அடங்கிய இந்த செயலி குறித்த புகார்கள் அவ்வப்போது வெடித்து வருகிறது.. குறிப்பாக ஊரக பகுதி சார்ந்த தகவல்கள் கிடைக்கும் அளவுக்கு, நகர்ப்புற பகுதி நில விபரங்கள் கிடைப்பதில்லை என்று கடந்த மாதம்தான் ஒரு புகார் கிளம்பியது. இப்போது மற்றொரு புகாரும் தமிழ் நிலம் செயலி சம்பந்தமாக வலம் வருகிறது. என்ன நடந்தது?
ஒருவர் தான் வாங்கிய நிலத்துக்கு பட்டா பெற, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல், இணைய வசதியை அரசு ஏற்படுத்தி தந்துள்ளது. இதனால் நேரம் மிச்சமாவதுடன், புரோக்கர்களின் தலையீட்டையும் தடுக்கலாம் என்பதால்தான், ஆன்லைனிலேயே தமிழ் நிலம் என்ற வெப்சைட்டை தமிழக அரசு துவங்கியது.

இதன்படி, தமிழகத்தின் மொத்த நிலம் குறித்த வருவாய் துறை ஆவணங்கள் மற்றும் தகவல்கள், இந்த tamilnilam தொகுப்பில் இணைக்கப்பட்டிருக்கும். எனவே, நிலத்தின் சொந்தக்காரர் யார்? நிலத்தின் சர்வே எண்? நிலம் எந்த வகையை சேர்ந்தது? எந்த பகுதியில் அமைந்துள்ளது? என்பதெல்லாம் பட்டாவை வைத்து, இந்த வெப்சைட் மூலம் தெரிந்து கொள்ள முடியும்..
பட்டா மாற்றம் வசதிகள்
உட்பிரிவற்ற பட்டா மாற்றம் மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே எண் போன்ற விபரங்களை உள்ளீடு செய்து, பட்டா, 'அ' பதிவேடு, நில வரைபட விபரங்களையும் பெற்று கொள்ளலாம்.. எந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் தேவையோ, அது உட்பிரிவற்ற பட்டா மாற்றமா அல்லது உட்பிரிவுடன் பட்டா மாற்றமா? போன்ற விவரத்தை எல்லாம் விண்ணப்பித்தில் குறிப்பிட்டும் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
இதனால், ஒருவருக்கு சொத்து பதிவு செய்யப்படும்போது, வருவாய் துறை மூலமாக, பட்டாவும் பெயர் மாற்றம் செய்ய முடியும்..
அதேபோல பழைய பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்யாதவர்கள், ஏற்கனவே பத்திரப்பதிவு செய்தவர்களும், இடம் அல்லது வீடு வாங்குவோரும், நில ஆவணங்கள், அங்கீகரிக்கப்பட்ட பட்டா நகல்களை பெற வேண்டுமானாலும், இந்த செயலி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ் நிலம் ஜியோ
தமிழ் நிலம் ஜியோ இன்போ என்ற இந்த செயலி, கடந்த ஜனவரியில் துவக்கப்பட்ட நிலையில், கிராமப்புற நில ஆவணங்கள், அங்கீகரிக்கப்பட்ட பட்டா நகல்களை 'தமிழ் நிலம்' செயலி மூலம் எளிதாக பெறுவதற்கு தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு மூலம் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் இதனை டவுன்லோடு செய்து, பட்டா விபரங்களை எளிதாக பார்க்கலாம் என்று வருவாய் துறை அறிவித்துள்ளது.
ஆனால், இந்த வசதி இப்போது முறையாக செயல்படவில்லை என்று ஆங்காங்கே புகார்கள் முளைத்து வருகின்றன.. இதுகுறித்து, இ - சேவை மையத்தினர் தரப்பில் சொல்லும்போது, "நுழைவு அனுமதி தேவைப்படுகிறது.. இதில் பட்டா விபரங்களை பார்க்க வேண்டுமானால் செல்போன் நம்பர் கொடுக்க வேண்டும்..
ஓடிபி வரல - அ பதிவேடு மிஸ்ஸிங்?
ஆனால் அப்படி கொடுக்கும்போது, அந்த நம்பருக்கு OTP கிடைப்பதில்லை. இதனால், செயலியில், திரையில் தெரியும் பட்டாவை டவுன்லோடு செய்ய முடிவதில்லை.. பிரதி எடுக்கவும் முடியாத நிலைமை ஏற்படுகிறது.. முக்கியமாக, , நில அளவை வரைபடங்கள், 'அ' பதிவேடு பிரதிகள் எடுக்க முடியவில்லை.. எனவே, இந்த கோளாறை அரசு சரிசெய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
ஆனால், இதுகுறித்து, வருவாய் துறை தரப்பில் சொல்லும்போது, 'தமிழ் நிலம் செயலியில் தொழில்நுட்ப ரீதியாக வரும் பிரச்சனைகளை கண்காணித்து வருகிறோம். இந்த வசதியை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.. விரைவில் கோளாறு செய்யப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications