பட்டா, நில அளவை.. வீடு, மனை சொத்து வாங்குவோருக்கு ஹேப்பி.. தமிழக அரசின் புதிய வசதி.. இனிமேல் நிம்மதி
சென்னை: வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்குவோர்களின் வசதிக்காகவே, புதிய வசதியை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.. இது தொடர்பான வெப்சைட் ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருப்பது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
ஒரு சொத்தை வாங்கும்போது, அதன் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம்தான் வில்லங்க சான்றிதழாகும். இந்த சொத்து இதற்கு முன்பு யாரிடம் இருந்தது? எந்தெந்த ஓனர்கள் சொத்தினை அனுபவித்தார்கள்? என்பவை இந்த வில்லங்க சான்றிதழில் பதிவாகியிருக்கும். அந்த சொத்துக்களில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்யவே, வில்லங்க சான்றிதழ்கள் தேவையாயிருக்கின்றன.

சொத்து வழக்குகள்: ஆனால், சொத்து தொடர்பான வழக்கு விபரங்கள், நீதிமன்ற தடை உத்தரவுகள் எதுவும், வில்லங்க சான்றிதழ்களில் தெளிவாக தெரிவதில்லை. சொத்து உரிமை மாற்றம் தொடர்பாக கோர்ட் பிறப்பித்த உத்தரவை, சம்பந்தப்பட்டவர்கள் சார் - பதிவாளரிடம் தாக்கல் செய்தால் மட்டுமே, அதுகுறித்து தெரியவரும்..
மற்றபடி வழக்குகள் நிலுவையில் இருப்பது, அதன் தற்போதைய நிலவரம் இதெல்லாம் மக்களுக்கு தெரிவதில்லை. இந்த வழக்கு விபரம் எதுவும் தெரியாமல், அந்த சொத்துக்களை வாங்கிட நேர்ந்துவிடுகிறது.. பத்திரப்பதிவுக்கு போகும்போதுதான், வழக்குகள் பற்றி தெரியவருகிறது. ஆனால், அந்த நேரத்தில் வேறு எதையும் செய்ய முடிவதில்லை.. இந்த சிக்கலை தீர்க்கவே வருவாய் துறை முக்கிய அதிரடியை கையிலெடுத்து வருகிறது.
பட்டா, நில அளவை: அதன்படி, பட்டா, "அ" பதிவேடு, நில அளவை வரைபடம் போன்ற விபரங்களை, ஆன்லைன் முறையில் பொது மக்கள் பெற வேண்டும் என்பதற்காக இ - சேவை இணையதளத்தில் வசதி செய்யப்பட்டு உள்ளது... அதாவது, நிலங்களின் அனைத்து வகை தகவல்களையும், ஒரே இணையதளத்தில் பெறும் வகையில் ஒருங்கிணைந்த தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது... இந்த வசதியை, www.clip.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மக்கள் பெறலாம்.
இந்த தளத்தில், பட்டா மேல்முறையீடு தொடர்பாக, வருவாய் நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குகளையும், உரிமையியல் வழக்குகள் குறித்த விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். வழக்கு பதிவு எண் அடிப்படையில் விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
விரைவில் வசதி: இதற்காக, மாவட்ட நீதிமன்றங்களின், ஆன்லைன் சேவை வசதி, வருவாய் துறையின் ஒருங்கிணைந்த இணையதளத்தில் சேர்க்கப்பட உள்ளதாக தெரிகிறது.. இந்த வசதியை மக்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருவாய்த்துறை தரப்பில் கூறப்படுகிறது.
ஆக சொத்துக்களை வாங்குவோர், அது தொடர்பாக நிலுவையில் உள்ள சிவில் வழக்கு விபரங்களை எளிதாக அறிய, வருவாய் துறை இணையதளத்தில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பது, மிகுந்த மகிழ்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications