Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டா மாறுதல் அவசியம்.. நாகை ரவுண்டானாவில் ஸ்கெட்ச் போட்டு தூக்கப்பட்ட விஏஓ! அரசு அதிகாரிகளே இப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நியாயமாக கிடைக்க வேண்டிய பட்டாவுக்காக பொதுமக்களிடம் லஞ்சம் கேட்பது அநியாயம்... இது ஏழை எளிய விவசாயிகளை பெரிதும் பாதிக்கிறது.. காசு கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற நிலையை மாற்ற, தைரியமாக லஞ்ச ஒழிப்புத் துறையை நாம் அனைவருமே அணுக வேண்டும்.. லஞ்சம் கேட்பவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவது மட்டுமே இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் தடுக்கும்.. இதோ இந்த நாகை சம்பவத்தை பாருங்கள்...!

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கடந்த 2011ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சாமுவேல் ஞானம். இவர், துரைபாண்டியன் என்பவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காமல் இருக்க 50,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

Patta Transfer

லஞ்சம் வாங்கிய திருச்சி போலீஸ்

இது குறித்து துரைபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.... கடந்த 25.11.2011 அன்று, தன்னுடைய உதவியாளர் சதீஷ் மூலமாக லஞ்சப் பணத்தைப் பெற்றபோது சாமுவேல் ஞானம் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு தரப்பட்டுள்ளது..

நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

குற்றம் நிரூபிக்கப்பட்ட முன்னாள் ஆய்வாளர் சாமுவேல் ஞானத்திற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி புவியரசு தீர்ப்பளித்தார்.. அதேபோல லஞ்சப் பணத்தை வாங்கி வைத்த உதவியாளர் சதீஷிற்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் மற்றும் போலீசார் சிறப்பாகச் செயல்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்துள்ளனர்... லஞ்சம் வாங்கியதற்காக இந்த தண்டனை நேற்றைய தினம் கொடுக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினமே நாகை மாவட்டத்தில் விஏஓ ஒருவர் லஞ்சம் வாங்கி அசிங்கப்பட்டுள்ளார்..

பட்டா மாறுதல்

நாகப்பட்டினம் மாவட்டம், தெற்குபொய்கை நல்லூரைச் சேர்ந்த விவசாயி தம்பியப்பன்.. வருக்கு 53 வயதாகிறது.. இவர் தனக்கு சொந்தமான நிலத்தின் பட்டா பெயர் மாறுதலுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். நீண்ட நாட்களாகியும் விண்ணப்பம் மீது எவ்வித நகர்வும் இல்லாததால் சம்பந்தப்பட்ட விஏஓ சபரிநாதனை (34) நேரில் சந்தித்து விவரம் கேட்டுள்ளார்.

அப்போது, பட்டா மாறுதல் செய்து தர சபரிநாதன் ரூ. 30,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்த தம்பியப்பன், லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை.. உடனே இதுகுறித்து நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். போலீஸாரின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூ. 30,000 பணத்துடன் தம்பியப்பன் தயாரானார். சபரிநாதனுக்கு போன் செய்து பணம் தயாராகிவிட்டது என்று சொல்லவும், புத்தூர் ரவுண்டானா அருகில் வருமாறு விஏஓ சொல்லி உள்ளார்..

நாகை விஏஓ - கிராம நிர்வாக அதிகாரி

அதன்படியே புத்தூர் ரவுண்டானா பகுதியில் லஞ்ச பணத்துக்காக காத்து கொண்டிருந்த சபரிநாதனிடம் அதை தம்பியப்பன் வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் இமயவர்மன் தலைமையிலான அதிகாரிகள், சபரிநாதனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதை சபரிநாதன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. பிறகு அதிகாரிகள் தெற்குபொய்கை நல்லூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அவரை அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள்.. இறுதியில் கோர்ட்டில் முன்னிலைப்படுத்தப்பட்ட சபரிநாதனை ஜெயிலிலும் அடைத்தனர். கைதாகி உள்ள அரசு அதிகாரியிடம் தொடர் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது..

பட்டா மாறுதல் அவசியம்

ஒரு நிலத்தின் மீதான சட்டப்பூர்வமான உரிமையை உறுதி செய்யவும், பிற்காலத்தில் சொத்தை விற்பனை செய்யவோ அல்லது தானமாக வழங்கவோ பட்டா மாறுதல் என்பது மிகவும் அவசியமான ஒன்று.. அரசு வழங்கும் இழப்பீடு அல்லது விவசாயக் கடன்கள் மற்றும் மானியங்களை பெறுவதற்கு பட்டா சம்பந்தப்பட்டவர் பெயரில் இருப்பது கட்டாயம்...

அப்படி பட்டா இருந்தால் மட்டுமே நிலத்தை, பிறர் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கவும், நீதிமன்ற ரீதியான சிக்கல்களை தவிர்க்கவும் முடியும். இப்படியான அத்தியாவசிய தேவைகள் இருப்பதால்தான் பட்டா மாறுதல் கோருகிறார்கள்... இது தெரிந்தும் லஞ்சம் கேட்கும் ஆபீஸர்களை என்னவென்று சொல்வது???

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+