பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அப்பல்லோவில் அனுமதி.. மூளையில் அறுவை சிகிச்சை
சென்னை: பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு திடீரென ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு காரணமாக, அவர் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பிரபலமான பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவர் பாரதி பாஸ்கர். சாலமன் பாப்பையா நடத்தும் பட்டிமன்றங்களில் இவரைத் தவறாமல் காணலாம். பட்டிமன்றங்களில் இவரது பேச்சுக்கு ரசிகர்கள் ஏராளம்.

கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எம்பிஏ படித்துள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக பாரதி பாஸ்கர் இன்று காலை சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

52 வயதான பாரதி பாஸ்கருக்கு மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காகச் சிறப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இது குறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "அழகிய தமிழில் பேசும் பாரதி பாஸ்கருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்" என ட்வீட் செய்துள்ளார்.
பாரதி பாஸ்கருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பட்டிமன்ற ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications