உங்களை பல்லக்குல தூக்கினு வந்தவாளுக்கு கால் வலிச்சா? செவுளில் அறையும் 'வேதம் புதிது' சினிமா காட்சி
சென்னை: தமிழகத்தில் ஆதீனத்தை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்லும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் சாமியார்களை பல்லக்கில் தூக்கி செல்வதை விமர்சித்து வேதம் புதிது திரைப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா பதிவு செய்திருந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்தப்படும். அன்றைய தினம் ஆதீனத்தைப் பல்லக்கில் தூக்கி சுமந்து வீதி உலா செல்வர்.

ஆதீனம் பட்டினப் பிரவேசம்
ஆனால் இந்த நூற்றாண்டிலும் கூட மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டினப் பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்வுக்குத் திராவிடர் கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த ஆண்டும் திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் பட்டினப் பிரவேசம் நடந்தது. நடப்பாண்டிலும் பட்டினப்
பிரவேச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கும் திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது.

தமிழக அரசு தடை
இதனையடுத்து ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் தூக்கினால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும்; மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் இந்த நிகழ்ச்சியைத் தடை செய்திடக் கோரி அனுப்பிய அறிக்கையின் படியும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23-ன் படி சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதாலும், பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீன கர்த்தரைப் பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்படுகிறது எனக் கோட்டாட்சியர் பாலாஜி அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இது மிகப் பெரும் சர்ச்சையாகி உள்ளது.

சட்டசபையில் விவாதம்
தற்போது பட்டினப் பிரவேசத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பாக தமிழக சட்டசபையிலும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு விவாதிக்கப்பட்டது. பட்டினப் பிரதேச விவகாரத்தில் சுமூக தீர்வு காணப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோசியல் மீடியாவில் வேதம் புதிது
இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜாவின் வேதம் புதிது திரைப்படத்தில் இடம்பெற்ற சாமியார்களை பல்லக்கில் தூக்கி செல்வதை விமர்ச்சிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த வீடியோ காட்சியை முன்வைத்து காரசாரமான விவாதங்களும் நடைபெறுகின்றன. வேதம் புதிது திரைப்படம் பல்வேறு பழமைவாத கருத்துகளுக்கு சம்மட்டி அடி கொடுத்தது. அது வெளியான காலத்திலேயே கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது.

பகிரப்படும் காட்சியில் உள்ளது என்ன?
இப்போது பகிரப்பட்டு வரும் வேதம் புதிது சினிமா படத்தின் காட்சியில் இடம்பெற்றுள்ளது: பிராமண சிறுவன் ஒருவன், சாமியாரிடம் இப்படி கேட்கிறார்....
சிறுவன்: ஸ்வாமி, நேக்கு ஒரு சந்தேகம்.. உங்களை ஏன் பல்லக்கில் தூக்கினு வந்தா?
சாருஹாசன்: டேய்.. நீண்ட பயணமாடோ..அவாளுக்கு கால் வலிக்கும்னோ என்னோ.. அதால பல்லாக்குல வந்தா.. சும்மா இர்றா
சிறுவன்: அப்போ.. உங்களை பல்லக்குல தூக்கினு வந்தவாளுக்கு கால் வலிச்சா..
(அதிர வைப்பது போன்ற மியூசிக்குடன் சாமியார் அங்கிருந்து நகருவார்.. பின்னர் தம்மை தூக்கி சுமக்க இருந்த பல்லக்கின் முன்பு நின்று பேசுவார்)
சாமியார்: சிவ..சிவா.. எல்லா சுமையையும் இறக்கி வெச்சுட்டதா நினைச்சேன்.. அது இல்லைன்னு பகவான் ஒரு குழந்தை ரூபத்துல சொல்லிட்டார்... இனி நான் யாருக்கும் சுமையா இருக்க விரும்பலை.. நேக்கு பல்லாக்கு வேண்டாம்.. இவ்வாறு கூறி விட்டு பாதயாத்திரையாக சாமியார் நடந்து செல்வார். இந்த வீடியோ காட்சிதான் இப்போது பலராலும் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டும் வருகிறது.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகள் எவை எவை..? பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு -
ரூ.354 கோடி சிங்கப்பெண் திட்டம் யாருக்காக? ரோந்து எங்கே? தமிழகத்தை உலுக்கிய 11 சிறுமிகள்.. அக்கிரமம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications