முதலமைச்சருக்கு 'பால் ஹாரிஸ் ஃபெல்லோ' விருது... கட்சியினர் வாழ்த்துமழையால் கரைபுரளும் உற்சாகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவின் சிகாகோ ரோட்டரி அமைப்பு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பால் ஹாரிஸ் ஃபெல்லோ விருது வழங்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு கட்சியினர் வாழ்த்துமழை பொழிந்து வருகின்றனர்.

மாவட்ட அளவில், மண்டல அளவில், மாநில அளவில் என அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் நாளிதழ்களில் விளம்பரங்கள் அளித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கொரோனா காலம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அமெரிக்க அமைப்பின் விருதை பெற்றமைக்காக முதலமைச்சருக்கு பாராட்டு விழாவே நடைபெற்றிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ரோட்டரி அமைப்பு

ரோட்டரி அமைப்பு

அமெரிக்காவின் சிகாகோ ரோட்டரி பவுண்டேஷன் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 'பால் ஹாரிஸ் ஃபெல்லோ' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. குடிநீர், சுகாதாரம், நோய்தடுப்பு, தாய்சேய் நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டு சேவையாற்றுபவர்களுக்கு ஆண்டுதோறும் 'பால் ஹாரிஸ் ஃபெல்லோ' விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த துறைகளில் எல்லாம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புற சேவையாற்றியதாக அங்கீகரித்து அவருக்கு இந்த விருதை அளித்துள்ளது.

முதலமைச்சர்

முதலமைச்சர்

தமிழக அரசை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த இந்த சர்வதேச அளவிலான அங்கீகாரத்தை பெரியளவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் அவரது ஆதரவாளர்கள் வட்டம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் நாளிதழ்களில் அரைபக்கம், முழுபக்கம் அளவிற்கு விளம்பரம் கூட அளிக்கப்பட்டதாம்.

கவுரவம்

கவுரவம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏ.சி.சண்முகத்தின் பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் தனது பெயருக்கு முன்னால் டாக்டர் பட்டம் போடுவதை விரும்பவில்லை. இந்நிலையில் தற்போது பால் ஹாரிஸ் ஃபெல்லோ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளதால் அதிமுகவினரின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

சிறந்த சேவை

சிறந்த சேவை

நோய் தடுப்பு பணிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியாக செயல்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில், அவருக்கான பதிலடியாக இந்த விருதை பார்க்கிறது அதிமுக முகாம். இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அங்குள்ள தமிழக அமைப்புகள் சார்பில் 'பண்பின் சிகரம்' 'வீரத்தமிழன்' உள்ளிட்ட பட்டங்களை வழங்கி சிறப்பிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+