OD அக்கவுண்ட் மூலம் உங்கள் வீட்டுக் கடனை 6 ஆண்டுகள் முன்பே அடைக்கலாம் - எப்படி? பொருளாதார நிபுணர்
சென்னை: OD அக்கவுண்ட் மூலம் உங்கள் வீட்டுக் கடனை விரைவில் அடைக்கலாம் - எப்படி? என்று பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். உங்கள் வீட்டுக் கடனை விரைவாக அடைக்க ஒரு நல்ல வழி இருக்கிறது. அதற்கு பெயர் ஓவர்ட்ராஃப்ட் (OD) ஹோம் லோன். சாதாரணமாக நாம் அவசரத்துக்காக சில பணத்தை FD அல்லது சேமிப்பு கணக்கில் வைத்திருப்போம், இல்லையா? அந்தப் பணத்தை OD கணக்கில் போட்டால், அது உங்கள் வீட்டுக் கடன் வட்டியைக் குறைக்கலாம் என்று கூறினார்.
பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "அன்பர்களே, உங்கள் வீட்டுக் கடனை விரைவாக அடைக்க ஒரு நல்ல வழி இருக்கிறது. அதற்கு பெயர் ஓவர்ட்ராஃப்ட் (OD) ஹோம் லோன். சாதாரணமாக நாம் அவசரத்துக்காக சில பணத்தை FD அல்லது சேமிப்பு கணக்கில் வைத்திருப்போம், இல்லையா? அந்தப் பணத்தை OD கணக்கில் போட்டால், அது உங்கள் வீட்டுக் கடன் வட்டியைக் குறைக்கும். அதே நேரத்தில் அவசரத்துக்கு அந்தப் பணத்தை எடுத்துக்கொள்ளவும் முடியும்.

சாதாரண வீட்டுக் கடன் vs OD வீட்டுக் கடன்
சாதாரண வீட்டுக் கடனில்:
அவசரப் பணம் FD-யில் இருந்தால் 3-5% வட்டி மட்டுமே கிடைக்கும்
அந்தப் பணத்தை கடன் அடைக்கப் பயன்படுத்தினால், திரும்ப எடுக்க முடியாது
முழு கடன் தொகைக்கும் வட்டி கட்ட வேண்டும்
கடனை அடைக்க 25 வருடங்கள் ஆகலாம்
OD வீட்டுக் கடனில்:
உங்கள் அவசரப் பணம் 8% வட்டி சேமிப்பு தரும் (கடன் வட்டி குறைவதால்).
எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம்.
OD கணக்கில் உள்ள பணத்தைக் கழித்து மீதிக்கு மட்டும் வட்டி.
கடன் தானாகவே விரைவில் முடியும்.
உதாரணத்துடன் புரிந்துகொள்வோம்
₹1 கோடி கடன், 7.5% வட்டி, 25 வருடங்கள்:
சாதாரண கடன்:
மொத்த EMI: 300 மாதங்கள்.
மொத்தம் திருப்பிக் கொடுக்க வேண்டியது: ₹2.21 கோடி.
OD கடன் (₹10 லட்சம் பாதுகாப்புப் பணம் வைத்தால்):
மொத்த EMI: 230 மாதங்கள் மட்டுமே.
மொத்தம் திருப்பிக் கொடுக்க வேண்டியது: ₹1.95 கோடி
சேமிப்பு: ₹26.37 லட்சம்.
வங்கிக் கட்டணங்கள்
OD கடனுக்கு வங்கிகள் 0-0.5% கூடுதல் வட்டி வசூலிக்கும்.
நிர்வாகக் கட்டணம்: ₹3,000-5,000.
எந்த வங்கிகளில் கிடைக்கும்?
OD வசதி உள்ளவை: SBI, BoI, BoB, ICICI, Axis, Federal, PNB, Indian Bank போன்றவை.
OD வசதி இல்லாதவை: HDFC Bank, Canara Bank.
தற்போது உள்ள வங்கியில் கிடைக்காவிட்டால், வேறு வங்கிக்கு மாற்றலாம். பெரும்பாலும் இதனை வங்கிகள் அனுமதிக்க தயங்குவார்கள். ஏனென்றால், அவர்களுக்கு இதனால் வட்டி வருமானம் குறையும்.
கவனிக்க வேண்டியவை
அவசரப் பணம் மற்றும் சும்மா இருக்கும் பணத்தை மட்டும் பயன்படுத்துங்கள்.
முதலீட்டுப் பணத்தைப் பயன்படுத்த வேண்டாம்.
அவசரப் பணத்தை வீணாக்க வேண்டாம்.
OD ஹோம் லோன் மூலம் உங்கள் வீட்டுக் கடனை 5-6 வருடங்கள் முன்னதாகவே அடைக்கலாம். லட்சக்கணக்கில் வட்டியைச் சேமிக்கலாம். அதே நேரத்தில் அவசரத்துக்குப் பணமும் கையில் இருக்கும். இது ஒரு அறிவார்ந்த நிதி முடிவு என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை.
இன்றே உங்களது வங்கியை தொடர்புகொண்டு, இது பற்றி அறிந்துகொள்ளவும்." இவ்வாறு பொருளதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ண மூர்த்தி எக்ஸ் தள பதிவில் விளக்கமாக கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications