ரூ.210 கட்டினால் போதும்! மாதம் ரூ.5000 பென்ஷன் கிடைக்கும்..மத்திய அரசின் அசத்தல் திட்டம்! விவரம் இதோ
சென்னை: மாதம் தோறும் ரூ.210 செலுத்தி வந்தால் போதும்.. ஓய்வு காலத்தில் மாதம் ரூ. 5 ஆயிரம் பென்ஷனாக கிடைக்கும் மத்திய அரசின் அசத்தலான திட்டம் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
மக்களின் நன்மைக்காக பல நல்ல திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. இதில் வயதான காலத்தில், ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பென்ஷன் திட்டம் மிகச்சிறந்த திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பொதுவாக, பென்ஷன் என்றாலே, வேலைக்கு போகிறவர்களுக்கு மட்டும்தான் ஓய்வூதியம் கிடைக்கும் என்ற பிம்பம் வலுவாக கட்டமைக்கப்பட்டு விட்டது..

இதில், தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்பு சாரா வேலை செய்பவர்களுக்கு பென்ஷன் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயமாகும். ஆனால், மாற்றும் விதமாக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வைத்துள்ளது. சுயதொழில் புரியும் நபர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களுக்கும் பென்ஷன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் உள்ளது.
ரூ. 5 ஆயிரம் கிடைக்கும்: இந்த திட்டத்தின் படி மாதம் ரூ. 240 செலுத்தினால் போதும், ஓய்வு காலத்தில் மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் பென்ஷனாக கிடைக்கும். இந்த திட்டத்தை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம். அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015-16 நிதி ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தது. அமைப்பு சாரா துறையில் வேலை செய்பவர்களுக்கு வயது முதிர்ந்த காலத்தில் நிலையான வருவாய் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த திட்டம்.
தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனாளர்களுக்கு மாதம் ரூ. 1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை கிடைக்கும். மத்திய அரசு இந்த திட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. மத்திய அரசு 50 சதவிகிதம் அல்லது ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் இதில் எது குறைவோ அந்த தொகையை தனது பங்காக அளிக்கும்.
மாதம் ரூ.210 செலுத்தினால் போதும்: இந்திய குடிமக்கள் யார் வேண்டும் என்றாலும் இந்த திட்டத்தில் சேர்ந்த்து பயன்பெற முடியும். அதாவது 18 வயது முதல் 40 வயது வரையிலான அனைவரும் சேரலாம். 18 வயதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேர்ந்தால் மாதம் ரூ.210 செலுத்தி வந்தால் போதும். அவரது 60 வயதுக்குப் பின் ரூ.5000 பென்ஷன் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் சேருவதற்கு விண்ணப்பதாரருக்கு ஒரு வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸில் சேமிப்பு கணக்கு இருந்தால் போதும்.
40 வயதில் இந்த திட்டத்தில் சேர்பவர்கள் 60 வயதுக்கு பிறகு மாதம் 5 ஆயிரம் ரூபாய் கிடைக்க வேண்டும் என்று விரும்பினால் மாதம் தோறும் ரூ.1,454 செலுத்த வேண்டும். 60 வயது வரை மாதம் தோறும் இந்த தொகையை கட்டி வந்தால் 60 வயது நிரம்பியதும் மாதம் தோறும் ரூ. 5 ஆயிரம் பென்ஷனாக கிடைக்கும். மாதம் ரூ.1,454 செலுத்த முடியாதவர்களுக்கும் இதர வாய்ப்புகள் உள்ளன.
ஒரு கண்டிஷன்: அதாவது, 40 வயது ஆனவர்கள் மாதம் ரூ.291 செலுத்தி இந்த திட்டத்தில் பயன்பெறலாம். ஆனால், அவர்களுக்கு 60 வயதுக்கு பிறகு ஓய்வூதியமாக மாதம் ரூ.1,000 கிடைக்கும். மாதம் ரூ.582 செலுத்தினால் பென்ஷனாக ரூ.2 ஆயிரமும், மாதம் ரூ.873 செலுத்தினால் பென்ஷனாக ரூ.3 ஆயிரமும் கிடைக்கும்.
மாதம் தோறும், ரூ.1,164 செலுத்தினால் 60 வயதுக்கு பிறகு ரூ.4 ஆயிரம் கிடைக்கும். முக்கிய இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவர்கள் வருமான வரி செலுத்துவர்களாக இருக்கக் கூடாது. எதிர்பாராத விதமாக இந்தத் திட்டத்தில் இணைந்திருந்தவர் இறக்க நேரிட்டால் அவரது குடும்பத்துக்கு உரிய பலன்கள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications