சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அங்கிட்டு மோடிக்கு புகழாரம்! இங்கிட்டு அண்ணாமலைக்கு செம சான்றிதழ்! அடடே அந்த தலைவரா அப்படி பேசினார்?

Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ராஜதந்திரம் மிக்கவர்; தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறந்த கட்சித் தலைவர் என்று தமிழக மூத்த அரசியல் தலைவர் பேசியிருப்பதுதான் இப்போது சமூக வலைதளங்களின் ஹாட் டாப்பிக்.

தமிழகத்தின் முதுபெருரும் அரசியல் தலைவர்களில் ஒருவர் பழ. அண்ணாமலை. திராவிடர் இயக்கம், காங்கிரஸ் பேரியக்கம் என பயணித்து தமிழ்த் தேசிய அரசியலைத் தொடருகிறவர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தொடக்கம் முதலே ஆதரவு தரக் கூடியவர் பழ.நெடுமாறன். தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்து வருபவர்.

“மோடி உரக்க பேசினா அமெரிக்காவே கேட்கும்” 2009ல் மட்டும் அவர் இருந்திருந்தா?அட்டாக் மோடில் அண்ணாமலை !“மோடி உரக்க பேசினா அமெரிக்காவே கேட்கும்” 2009ல் மட்டும் அவர் இருந்திருந்தா?அட்டாக் மோடில் அண்ணாமலை !

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

அதேநேரத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, தமிழர் விரோத நடவடிக்கைகள் தொடர்பாக கடும் எதிர்ப்பையும் காட்டி வந்தார். இந்நிலையில் தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் நேற்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜகவினர் பங்கேற்பதால் பெரும்பாலான பெரியார் இயக்கங்கள், தமிழ்த் தேச அமைப்புகள் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்திருந்தன.

 மோடி பேசியிருந்தால்..

மோடி பேசியிருந்தால்..

இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, 2009-ம் ஆண்டில் பிரதமராக நரேந்திர மோடி இருந்திருந்தால் இலங்கை இனப்படுகொலை நடந்திருக்காது. இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு தரக் கூடிய ஒரே பிரதமர் நரேந்திர மோடிதான். ஈழத் தமிழர்கள், இந்தியாவை வெறுத்து ஒதுக்கி வைத்திருந்தனர். இதனை மாற்றியது மத்திய பாஜக அரசுதான். பிரதமர் மோடி உரத்துப் பேசினால் அமெரிக்காவே கேட்கும் என்றார்.

இலங்கையும் சர்வதேசமும்

இலங்கையும் சர்வதேசமும்

இதில் பழ.நெடுமாறன் பேசியதாவது: சிங்கள மக்கள்தான் ராஜபக்சே சகோதரர்களை ஆட்சியில் அமர்த்தினார். இன்று அதே சிங்கள மக்கள்தான் ராஜபக்சேக்களுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். சிங்கள மக்கள் இன்று வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இதனால் ராஜபக்சே சகோதரர்கள் ஓடி ஒளிந்து கொள்கிற நிலைமைதான் உருவாகி உள்ளது. தற்போதைய நிலையில் இலங்கை விவகாரம் சர்வதேச பிரச்சனையாகக் கூடிய சாத்தியங்கள் உள்ளன.

அண்ணாமலைக்கு பாராட்டு

அண்ணாமலைக்கு பாராட்டு

இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றி நிற்கிறது. இது இந்தியாவுக்கு பேராபத்தானது. இலங்கை பிரச்சனையை எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி ஆழமாக புரிந்து கொண்டு பேசினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ராஜதந்திரம் மிக்க தலைவர். இவ்வாறு பழ.நெடுமாறன் பேசினார்.

English summary
Senior Tamil National Leader Pazha Nedumaran hailed Tamilnadu BJP President K.Annamalai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X