தெலுங்கர், வட மாநிலம் பேசி திசைத் திருப்பும் குறுந்தேசியவாதி.. சீமான் மீது நெடுமாறன் மறைமுக அட்டாக்
பிற மொழியினரை வந்தேறி என பேசும் சீமானை குறுந்தேசியவாதி என மறைமுகமாக விமர்சிக்கிறார் நெடுமாறன்.
சென்னை: தெலுங்கர், வட மாநிலத்தவர் என பேசி தமிழர்களை திசை திருப்ப குறுந்தேசியவாதிகள் முயற்சிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரை குறிப்பிடாமல் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் மறைமுகமாக சாடி உள்ளார்.
இது தொடர்பாக நெடுமாறன் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றுள்ளதாவது: தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசுகிற மக்களின் எண்ணிக்கை- 42,34,302- 5.87%, கன்னடம் - 10,45,238 - 1.45%, மலையாளம் - 5,57,705 - 0.77%, சௌராட்டிரர் - 9,02,621 - 1.25%, உருது - 12,64,537 - 1.75% மொத்தம் - 80,04,403 - 11.09%.
இவர்களை தவிர, பழங்குடி மக்கள் பேசுகிற மொழியினர் மற்றும் இந்தியாவின் பிற மொழிகளைப் பேசுபவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணத்தகும் அளவிற்கு மிகமிகக் குறைவாகும். ஒரே மொழிவழித் தேசிய இன மக்கள் மட்டுமே தனித்து வாழும் ஒரு நாடு உலகில் எங்கும் அறவே இல்லை. உலக நாடுகள் எல்லாவற்றிலும் பெரும்பான்மை தேசிய இன மக்களும், சிறுபான்மை தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களும் கூடி வாழ்கிறார்கள். பெரும்பான்மை தேசிய இனத்தைச் சேர்ந்த மக்கள், சிறுபான்மை இன தேசிய மக்களுக்குரிய உரிமைகளை அளித்தும், அவர்களை அரவணைத்தும் வாழ்கிறார்கள். சிறுபான்மை தேசிய இன மக்களும் தாங்கள் வாழும் நாட்டையே தங்களின் தாயகமாகக் கருதி பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகிறார்கள். மேலும் அந்த மக்கள் தமிழர்களுடன் இரண்டறக் கலந்து வீட்டு மொழியாகத் தங்கள் மொழியையும், நாட்டு மொழியாகத் தமிழையும் ஏற்று வழங்கி வருகிறார்கள்.

தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பல்வேறு வகையில் சிறப்பாக தொண்டு புரிந்த தொண்டாற்றி வருகிற பல அறிஞர்கள் சிறுபான்மை மொழிப் பேசுகிற தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. இத்தாலி நாட்டிலிருந்து சமயப் பரப்புரைக்காக தமிழ்நாட்டிற்கு வந்த அறிஞர் ஜியுபோப், இத்தாலியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த பெஸ்கி என்னும் வீரமா முனிவர், அயர்லாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த அறிஞர் கால்டுவெல் போன்றவர்கள் தமிழின் பெருமையையும், தமிழ் இலக்கியங்களின் சிறப்பையும் உலகறியச் செய்தார்கள் என்பதை ஒருபோதும் நாம் மறக்க முடியாது. தமிழ்நாட்டில் நிலவிய சமண - பௌத்த சமயங்கள், அவர்கள் படைத்த தமிழ் இலக்கியங்கள், அவர்களின் வரலாறு ஆகியவற்றை ஆய்ந்து முதன்முதலாக நூல்களாகப் படைத்தப் பெருமைக்குரிய மயிலை சீனி. வேங்கடசாமி ஒரு தெலுங்கர். அதைப்போல கீழடி ஆய்வில் முனைந்து ஈடுபட்டு வைகைக் கரை தமிழர் நாகரிகம் மிகத் தொன்மையான கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிந்து தமிழரின் பெருமையை உலகறியச் செய்த முனைவர் அமர்நாத் இராமகிருட்டிணன் அவர்கள் சௌராட்டிர மொழிப் பேசுபவர் என்பதை உணரவேண்டும். இத்தகைய அறிஞர்களுக்குத் தமிழினம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் அலுவலகங்களிலும், வங்கி, ஆயுள் காப்பீடு, தொடர்வண்டித்துறை, அஞ்சல் துறை, தகவல் தொடர்புத்துறை, இந்திய அரசின் பல பெருந்தொழில்களான நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பெரம்பலூர் தொடர்வண்டி உற்பத்தித் தொழிற்சாலை, ஆவடி டாங்கி தொழிற்சாலை, சேலம் எஃகு தொழிற்சாலை, திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் போன்ற பல பெருந்தொழிற்சாலைகளில் குறைந்த அளவு 75% வேலை வாய்ப்பு தமிழர்களுக்கு அளிக்கப்படவேண்டும் எனப் போராட வேண்டிய மக்களின் கவனத்தைத் திசைத் திருப்பும் வகையில் குறுந்தேசியவாதிகள் செயல்படுகிறார்கள்.
இவர்களின் இச்செயலின் விளைவாக இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழ்ந்துவரும் தமிழர்களுக்கு எதிரான உணர்வைத் தோற்றுவித்து அவர்களை அந்தந்த மாநில மக்கள் வேண்டாதவர்களாகப் பாவித்து அவர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதற்குத் தூண்டுவதாகும். குறுந்தேசியவாதிகளின் பொறுப்பற்ற செயல்களின் விளைவாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் எதிர்ப்புக் கிளம்பும். வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அந்தந்த மக்களின் அன்பினையும் மதிப்பினையும் பெற்று அவர்களோடு இணைந்து வளமாக வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு குறுந்தேசியவாதிகள் அநீதி இழைக்கிறார்கள். இவ்வாறு நெடுமாறன் சாடியுள்ளார்.
-
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications