சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு இல்லை? முயல்கள் காரணமா?
சென்னை: சென்னை திருவொற்றியூரில் உள்ள விக்டரி பள்ளியில் எந்த வாயுக் கசிவும் இல்லை என தகவல் கிடைத்துள்ளது. பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில் வாயு கசிவு இல்லை என சொல்லப்படுகிறது.
சென்னை திருவொற்றியூரில் விக்டரி பள்ளியில் கடந்த மாதம் 25 ஆம் தேதி திடீரென வாயுக் கசிவால் 35 மாணவர்கள் மயங்கி விழுந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில் பள்ளிக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே பள்ளியை திமுக எம்பி கலாநிதி வீராசாமி, பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் விக்டரி பள்ளி 10 நாட்கள் விடுமுறைக்கு பிறகு கடந்த 4ஆம் தேதி மீண்டும் திறப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து பள்ளி நிர்வாகத்துடன் அன்றைய தினம் காலை வாக்குவாதம் செய்தனர். வாயுக் கசிவு எதனால் வந்தது, அதை சரி செய்தாகிவிட்டதா போன்ற எந்த கேள்விகளுக்கும் விடைச் சொல்லாமல் பள்ளியை திறக்கக் கூடாது என வாக்குவாதம் செய்தனர்.
அப்போது சில மாணவிகள் தங்கள் வகுப்பறைக்குச் சென்றனர். அப்போது அவர்களில் 9 மாணவிகளுக்கு அடுத்தடுத்து வாந்தி மயக்கம் ஏற்பட்டது. சிலருக்கு மூச்சுத்திணறலும் இருந்ததால் பதறிய பெற்றோர் குழந்தைகளை தூக்கிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து பள்ளிக்கு நவம்பர் 4ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளியை கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து வாயுக் கசிவிற்கான காரணத்தை கண்டறியும் வரை , அதாவது மறு அறிவிப்பு வரும் வரை பள்ளியை தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிட்டிருந்தனர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினரும் அன்றைய தினம் பேட்டி அளித்த போது , "பள்ளியில் எந்த வாயுக் கசிவும் இல்லை. பள்ளியை ஒரு முறை சுத்தம் செய்துவிட்டுத்தான் மீண்டும் திறக்க முடிவு செய்தோம். இது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும்" அவர்கள் தெரிவித்திருந்தனர்.
ஆனால் பெற்றோர்களோ, "எங்களிடம் அது போல் எந்த கருத்தையும் பள்ளி நிர்வாகம் கேட்கவில்லை. நாங்கள் வாயுக் கசிவு குறித்து கேட்ட போது கூட வேண்டுமானால் வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்றுதான் பதில் அளித்தனர் என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்றும் இந்த பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பள்ளியில் வாயுக் கசிவு இல்லை என தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் பள்ளி வளாகத்தில் முயல்கள் வளர்ப்பதால் துர்நாற்றம் வீசியதா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு! ஒரே நாளில் தீர்வு.. சென்னைக்கு குஷி -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications