படார்னு "அசைந்த" கூடை.. கிட்ட போன ஆபீசர்ஸ்.. உள்ளே எட்டிப்பார்த்தால்... திருதிருன்னு அந்த "உருவம்"

மலேசியாவில் இருந்து அரியவகை குரங்குகளை கடத்தி வந்த நபர்களை போலீசார் விசாரித்து வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிகாரிகள் அத்தனை பேரும் ஏர்போர்ட்டில் சோதனையில் குழுமியிருக்க, அசால்ட்டாக அந்த கூடையை கொண்டு செல்ல முயன்றுள்ளார்கள் 2 இளைஞர்களும்.. இறுதியில் அதிகாரிகளிடம் வசமாக சிக்கிவிட்டனர்.. அந்த கூடைக்குள் அப்படி என்ன இருந்தது?

கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அனைத்து ஏர்போர்ட்களிலும் சுங்க அதிகாரிகள் தீவிரமான சோதனைகளை கையில் எடுத்து வருகின்றனர்.. கூடுதல் விழிப்புணர்வுடன் கண்காணித்தும் வருகிறார்கள்.

துபாய், மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு விமானங்களில் வரும் பயணிகள் தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள், விலங்குகள், பறவைகள் உட்பட பல்வேறு பொருட்களை, பல்வேறு வடிவங்களில் மறைத்து கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது..

 அசைந்த கூடை

அசைந்த கூடை

சில நாட்களுக்கு முன்பு, சென்னை ஏர்போர்ட்டில் ஒரு சம்பவம் நடந்தது.. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று வந்திறங்கியதில், அதில் ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. அதனால், அவரது உடைமைகளை சோதனை செய்தபோதுதான், அவர் கொண்டுவந்திருந்த கூடை ஒன்று லேசாக அசைந்தது.. ஏதோ உயிருள்ள பொருள் உள்ளே இருப்பதுபோலவும் தெரிந்தது.. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் கூடையை திறந்து பார்த்தனர்.. ஆனால், அதிகாரிகளால் அது என்னவென்று உடனே அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.. பிறகுதான் அவையெல்லாம் அரிய வகை உயிரினங்கள் அதாவது பல்லிகள் என்று தெரியவந்தது.

குள்ளநரி

குள்ளநரி

இது தென் ஆப்பிரிக்கா, வட அர்ஜெண்டினா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள காட்டுப்பகுதிகளில் மட்டும் வாழுமாம்.. ரொம்பவும் அபூர்வமானதும்கூட.. இந்த 4 சிறிய தேகு பல்லிகளை அந்த கூடையில் இருந்தன.. இதைதவிர, குள்ளநரி போல ஒன்று தென்பட்டது.. அது வடஅமெரிக்கா பகுதிகளில் வசிக்கும் அரிய வகை குள்ளநரி வகையை சேர்ந்ததாம்.. ரக்கூன் குட்டி என்பார்கள்.. இதுவும் அந்த கூடைக்குள்ளேயே இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்... இதை பற்றி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பயணியிடமே கேட்டனர்.. அவைகள் எல்லாம் அபூர்வ வகை குட்டிகள் என்பதால், அவற்றை வீட்டில் வளர்க்க எடுத்து வந்ததாக சொன்னார்..

 4 பல்லிகள்

4 பல்லிகள்

ஆனால், இப்படி விலங்குகளை இன்னொரு நாட்டிற்கு கொண்டுவந்தால், அந்த விலங்குகளுக்கான ஆவணங்கள் மற்றும் அந்த உயிரினங்களை மெடிக்கல் செக்கப் செய்து, அவைகளுக்கு நோய் கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்பதற்கான சர்ட்டிபிகேட்களையும் கொண்ட வர வேண்டும். இதுதான் விதிமுறை. ஆனால், இவைகள் எதுவுமே அந்த பயணியிடம் இல்லை.. இதைதவிர, சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று, இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய வனவிலங்கு துறையிடமும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும்... அந்த சான்றிதழ்களும் பயணியிடம் இல்லை.. எனவே, பறிமுதல் செய்யப்பட்ட பல்லிகள், ரக்கூன் ஆகியவற்றை மறுபடியும் மலேசிய நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 ஏர் ஏஷியா

ஏர் ஏஷியா

இப்போதும் அதுபோலவே ஒரு சம்பவம் நம்முடைய சென்னை ஏர்போர்ட்டிலேயே நடந்துள்ளது.. தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து பெருமளவு, வெளிநாட்டு வன உயிரினங்கள் சென்னைக்கு கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனால், மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர்... அப்போது, மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, ஏர் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று நேற்று நள்ளிரவு வந்தது.

 பிளாஸ்டிக் கூடை

பிளாஸ்டிக் கூடை

அதில் வந்த பயணிகளை மதிய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்காணித்தபோது, சென்னையைச் சேர்ந்த வினோத் (28), விக்னேஷ் (34) ஆகிய 2 பேரும் பிளாஸ்டிக் கூடைகளுடன் வந்தார்கள்.. அதனால், இவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.. இருவரையும் நிறுத்தி விசாரித்தார்கள்.. இருவருமே, மலேசியா நாட்டிற்கு டூர் சென்றுவிட்டு வந்ததாக சொன்னார்கள்.. ஆனால், 2 பேருமே முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள்.. பிறகுதான், அந்த பிளாஸ்டிக் கூடைகளை திறந்து பார்த்து சோதனையிட்டனர். 2 பேரின் பிளாஸ்டிக் கூடைகளுக்குள்ளும் 'மர்மமோசெட்' எனப்படும் குரங்குகள் இருந்தன. இந்த குரங்குகள், தென் அமெரிக்க காட்டு பகுதிகளில்தான் அதிகமாக காணப்படுமாம்.. அபூர்வமான விலங்கும்கூட..

 4 குரங்குகள்

4 குரங்குகள்

இந்த 4 வெளிநாட்டு குரங்குகளை பறிமுதல் செய்த போலீசார், அதுகுறித்து விசாரணையை விரிவுபடுத்தினர்.. முறையான அனுமதியின்றி, சட்ட விரோதமாக இந்தியாவுக்கு கடத்திக் கொண்டு வரப்பட்டு இருப்பது உறுதியானது.. மேலும், முறையான மருத்துவ பரிசோதனையும் செய்யாமல், குரங்குகளை கொண்டு வந்திருக்கிறார்கள்.. அதனால் 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.. அத்துடன் அரிய வகை குரங்குகளை இந்தியாவிற்குள் அனுமதிக்க மறுத்து, கடத்தி வரப்பட்ட மலேசிய நாட்டுக்கு, எந்த விமானத்தில் வந்ததோ, அதே விமானத்தில் திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர்.. அதற்கான செலவுகளையும், இந்த 2 பேரிடம் வசூல் செய்ய முடிவு செய்துள்ளனராம்.. 4 குரங்குகளும் இன்று இரவு ஃபிளைட்டில் மலேசியா செல்கின்றன..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+