சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓ மை காட்.. "இந்த" பிரச்சனையா.. உடனே கணவனை வீட்டை விட்டு வெளியேற்றுங்கள்.. ஹைகோர்ட் அதிரடி

பிரச்சனை வந்தால் கணவனை வீட்டை விட்டு வெளியேற்றலாம் என ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: கணவரால் வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டால், அவரை வீட்டைவிட்டு வெளியேற்றுங்கள் என்று ஹைகோர்ட் நீதிபதி ஒருவரே உத்தரவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை கிளப்பி வருகிறது.

கணவன் மனைவி வாழ்வில், சண்டைகளும் பிரச்னைகளும் வந்து போவது இயல்பு என்றாலும், பலநேரங்களில் டைவர்ஸ் கேட்டு கோர்ட் வரை வந்துவிடுகின்றனர்.

அப்படி கோர்ட்டுக்கு வரும் தம்பதிகளுக்கு, நீதிமன்றங்கள் பெரும்பாலும் உரிய தீர்ப்பை தந்தாலும், சில நேரங்களில் சர்ச்சை மற்றும் விநோத உத்தரவுகளையும் பிறப்பித்து விடுவது வழக்கம்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு.. வடகிழக்கு மாநிலங்களில் மீண்டும் உக்கிரமடையும் சி.ஏ.ஏ.எதிர்ப்பு போராட்டம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. வடகிழக்கு மாநிலங்களில் மீண்டும் உக்கிரமடையும் சி.ஏ.ஏ.எதிர்ப்பு போராட்டம்

 தாலி + ப்ரூப்

தாலி + ப்ரூப்

அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்புகூட தாலி பிரச்சனை ஒன்று எழுந்தது.. தாலியை கழற்றுவது கணவனுக்கு செய்யும் உளவியல் கொடுமை என்று கூறியது.. தாலியை கழற்றுவது, ஒரு திருமண பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வர போதுமானது என்று நாங்கள் சொல்லவில்லை, ஆனால், மனைவியின் இந்தச் செயல், இந்த வழக்கில் அவர் நோக்கங்களின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வர ஓர் ஆதாரமாக இருக்கிறது என்று கோர்ட் கூறியிருந்தது. இன்னொரு வழக்கில், மனைவி என்பவர் பணம் கொடுக்கும் ஏடிஎம் அல்லது பணம் வழங்கும் பசு இல்லை என்று கூறி, அந்த பெண்ணுக்கு விவாகரத்து வழங்கியது.

 மஞ்சுளா

மஞ்சுளா

இப்படிப்பட்ட நிலையில், இன்னொரு வழக்கில் வித்தியாசமான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி உள்ளது.. ஒரு தம்பதி விவாகரத்து கேட்டு ஹைகோர்ட்டை நாடியுள்ளனர்.. இந்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, கணவர் வீட்டை விட்டு வெளியேற கேட்டு மனைவி மனுதாக்கல் செய்ததில் குடும்பநல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கில் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஹைகோர்டின் இந்த வழக்கை நீதிபதி மஞ்சுளா விசாரித்தார்.

 நடுநடுங்கும் மனைவி

நடுநடுங்கும் மனைவி

தன்னுடைய உத்தரவில், "ஒரே வீட்டில் கணவனும் மனைவியும் இருக்கும்போது கணவரால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மனைவி அச்சம் தெரிவித்தால், ஒரே வீட்டில் இருக்கலாம் ஆனால் கணவன் மனைவியை துன்புறுத்தக் கூடாது என்று உத்தரவிட முடியாது.. அதனால் கணவர் வேறு இடத்துக்கு மாற வேண்டும், இல்லாவிட்டால், காவல்துறையின் உதவியோடு வேறு இடத்துக்கு கணவன் மாற்றப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 அப்செட்

அப்செட்

அதுமட்டுமல்ல, கணவனின் நடவடிக்கைகள் மனைவியால் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இருப்பதாகவும், ஒரு பெண் தான் சுதந்திரமாக வாழவும் சுதந்திரமாக தனது பணிகளை மேற்கொள்ளும்போது அதை அவருடைய கணவர் இடையூறு ஏற்படுத்தினால் அது மோசமாக இருக்கும் என்றும் நீதிபதி முலும் குறிப்பிட்டுள்ளார். கணவரால் வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்படும்போது அவரை வீட்டிலிருந்து வெளியேற்றினால்தான் அமைதி நிலவும் என்ற பட்சத்தில் அவர்களை வெளியேற்றுவதற்கான உத்தரவை நீதிமன்றங்கள் பிறப்பிக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

 ஆச்சரியம்

ஆச்சரியம்

கணவரால் வீட்டில் அடிக்கடி பிரச்னை ஏற்படும்போது அவரை வெளியேற்றினால்தான் அமைதி நிலவும் என்றால், அதற்கான உத்தரவை நீதிமன்றங்கள் பிறப்பிக்கலாம் என்று ஹைகோர்ட்டே இப்படி உத்தரவிட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை கிளப்பி உள்ளது.. நீதிமன்ற உத்தரவை விமர்சிக்க முடியாது என்றாலும், இதுதொடர்பான கருத்துக்களையும் சோஷியல் மீடியாவில் இணையவாசிகள் பதிவிட்டு வருகிறார்கள்.

English summary
Peculiar order by chennai high court and remove husband from house to maintain domestic peace பிரச்சனை வந்தால் கணவனை வீட்டை விட்டு வெளியேற்றலாம் என ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X