“ஆல் ஓவர்”.. மசோதாக்கள் நிலுவையில் இருக்கா? ஒப்புதல் இல்லை என்பதே பொருள்! போட்டு உடைத்த ஆளுநர் ரவி
சென்னை: சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் நிலுவையில் வைக்கப்பட்டு இருந்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் அளிக்கவில்லை என்பதே பொருள் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருக்கிறார். இந்தியாவின் இந்திய குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி இவ்வாறு பேசி உள்ளார்.
தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் கடந்த 2022 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி. நியமிக்கப்பட்டார். ஆளுநராக பதவியேற்ற சில வாரங்களிலேயே ரவிக்கு தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் பல்வேறு வகைகள் நீடித்து வருகின்றன.

நிலுவை மசோதாக்கள்: தமிழ்நாடு சட்டசபையில் ஏகமனதோடு அரசால் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, 7 தமிழர் விடுதலை மசோதா, ஆன்லைன் ரம்மி தடை மசோதா உள்ளிட்ட பல மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் அவை கிடப்பில் உள்ளன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால் நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநர் ரவி எந்த முடிவும் எடுக்காத காரணத்தால் மாணவர்கள் தொடர்ந்து தேர்வெழுதி வருகிறார்கள். ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்ட மசோதா காலாவதியாகும் வரை எந்த முடிவையும் எடுக்காமல் இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில வாரங்களுக்கு அந்த மசோதாவை 2 முறையாக ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார்.

அரசுடன் ஆளுநர் மோதல்: இதேபோல் மற்ற மசோதாக்களின் முடிவு என்னவென்றே தெரியாத நிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இது அல்லாமல் ஆளுநர் ரவி பல்கலைக்கழகங்களில் எடுக்கும் முடிவுகள், தமிழ்நாடு பெயர் சர்ச்சை, ஆளுநரின் சட்டப்பேரவை கூட்ட அறிமுக உரையில் அரசு எழுதிக்கொடுத்த குறிப்புகளை படிக்காதது போன்றவை இந்த மோதலை மேலும் பெரிதாக்கின. இருப்பினும் ஆளுநரால் மட்டுமே சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தர முடியும் என்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல முறை இது தொடர்பாக ஆளுநரிடம் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று இந்திய குடிமைப் பணி தேர்வுகளுக்காக தயாராகும் மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக சட்டசபையில் அரசால் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்தின் மூலம், அவை இனி ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு வர முடிகிறது. ஆளுநர் ரவி தனது உரையில் கூறியதாவது, "சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள். உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வே நிலுவையில் வைப்பது நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள் என்று தெரிவிக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications