வாரிசுகளின் போட்டியால் பரபரக்கும் பென்னாகரம்.. ராமதாஸ் மகன் Vs ஜி.கே. மணி மகன்? - யார் பலம்?
சென்னை: பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி இரண்டு வாரிசுகளின் நேரடி மோதலால் தேர்தல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நடைபெற உள்ள 2026 தேர்தல் களத்தில் தமிழ்நாட்டிலுள்ள மற்ற சட்டமன்றத் தொகுதிகளைவிட பென்னாகரம் அதிக முக்கியத்துவம் கொண்டதாக மாறியிருக்கிறது. அதற்குக் காரணம் பாட்டாளி மக்கள் கட்சியில் வலிமை வாய்ந்த சக்தியாக இருந்தவரும் டாக்டர் ராமதாஸின் வலது கரமாகவும் கருதப்பட்ட ஜி.கே.மணியின் கோட்டையாக இத்தொகுதி கருதப்படுகிறது.
அதற்குக் காரணம் அவரது சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதியாக இருப்பதுதான். திமுக தொடங்கப்படுவதற்கு முன்னர் அந்த நிலையில்லை. ஆரம்பக் காலங்களில் காங்கிரஸ், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ஆகிய பொது அடையாளம் கொண்ட கட்சியின் வேட்பாளர்கள் வென்றுள்ளனர். 1962ல் இத் தொகுதியில் திமுக வென்றது. அதே திமுக ஆட்சி அமைத்த 1967 தேர்தலில் இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி வென்றது.

திமுகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட இங்கே போட்டியிட்டு சில தேர்தல்களில் தோல்விகளை அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. பாமக என்ற கட்சி தொடங்கப்பட்ட 90களுக்குப் பின்னர் நிலைமை வேறானது. களம் சாதி சார்ந்த அரசியலுக்கு வலுசேர்ப்பதாக இருந்தது. பெரும்பான்மை சாதியைச் சார்ந்த மக்களின் ஒருங்கிணைப்பினால் பாமகவின் கோட்டையாக ஒரு தோற்றம் உருவானது. ஆனால், இத்தொகுதியின் வெற்றி வேட்பாளர்கள் வெறுமனே பாமகவைச் சார்ந்தவர்கள் மட்டுமே பெரும்பான்மையாக இருக்கவில்லை என்பதே நிஜம்.
தொடர்ந்து 2006, 2010 ஆகிய இரு சட்டமன்றத் தேர்தல்களில் திமுக தொடர்ச்சியாக இருமுறை வென்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால், சாதிய அரசியலின் மையப்புள்ளியாக முன்வைக்கப்படும் இத்தொகுதியில் 2-11இல் இந்தியப் பொதுவுடைமை கட்சியின் வேட்பாளர் நஞ்சப்பன் வெற்றி பெற்றுள்ளார். இடதுசாரி அரசியல் சித்தாந்தமும் இத்தொகுதியில் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டியே உள்ளது.
இவ்வாறு கலவையான பல்வேறு நல்ல அம்சங்கள் இருந்தாலும், பொதுப்புத்தியில் இது பாமக சார்ந்த சாதிய கட்சியின் அடையாளத்துடன் இத்தொகுதி இணைத்து அடையாளம் காணப்படுவதை மறுக்கமுடியாது. 1996 வெற்றி மூலம் ஜி,கே.மணி பாமகவின் முகத்தை இத்தொகுதிக்கு அளித்தார். அடுத்து 2001 தேர்தலிலும் அவரே வெற்றியாளர். தொடர்ந்து 10 ஆண்டுகள் அவரே இத்தொகுதியின் அடையாளமாகக் கருதப்பட்டார். அதன்பின்னர் அடுத்த வந்த பத்து ஆண்டுகள் திமுக வசம் வென்றது இத்தொகுதி.
ஜிகே மணியின் செல்வாக்கு
ஜி.கே.மணி மூலம் உண்டான பாமக செல்வாக்கைக் கணக்கிட்டு, கடந்த 2016இல் பாமகவின் வேட்பாளராக ராமதாசின் மகன் அன்புமணி களம் கண்டார். ஆனால், திமுக வேட்பாளர் இன்பசேகரனிடம் அவர் தோல்வியைத் தழுவினார். அதற்குக் காரணம் கூட்டணி பலம் இல்லாதது. 'மாற்றம் முன்னேற்றம்' எனத் தனித்து களம் கண்டது. அவரை முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்கவில்லை.
அன்புமணி இங்கு களம் கண்டதன் மூலம் ராமதாஸின் அரசியல் வாரிசு போட்டியிட்ட தொகுதி என்ற முத்திரை இதன் மீது விழுந்தது. அன்புமணியின் தோல்வி மோசமானதாக இருக்கவில்லை. அவர் 50 ஆயிரத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றார். இடைவெளி சுமார் 18 ஆயிரம் வாக்குள் என்ற அளவிலிருந்தது.
அன்புமணியின் தோல்விக்குப் பின்னர் மீண்டும் கூட்டணி பலத்துடன் பாமக வேட்பாளராக ஜி.கே.மணி களம் கண்டார். அவர் இம்முறை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சுமார் 80 ஆயிரம் வாக்குகளைப் பெற முடிந்தது. ஒருவகையில் பாமகவின் கோட்டை எனத் தோற்றம் பெற்றுள்ள பென்னாகரத்தில் பாமக தனித்து நின்று வெற்றி பெற முடிந்ததில்லை. கூட்டணியே பாமகவின் வெற்றியை இதுவரை உறுதிசெய்துள்ளது.
கடந்த முறை ராமதாஸின் மகன் அன்புமணியின் தொகுதி எனக் கருதப்பட்ட இந்தப் பென்னாகரம், இந்த முறை ஜிகே மணியின் வாரிசான தமிழ்க் குமரன் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிருக்கிறார். இதனால் மகன்களின் தொகுதியாக மாறியுள்ளது பென்னாகரம்.
திமுகவுக்கு இங்கு பலம் உள்ளது. கூடவே பாமகவில் இப்போது திரிசங்கு நிலையை எட்டியுள்ள ஜி.கே.மணியின் தனிப்பட்ட செல்வாக்கும் இங்கு உள்ளது. எனவே தமிழ்க் குமரன் மீது பலரது கவனம் பெற்றுள்ளது. அதுவும் பாமகவின் அடையாளமாக இருந்தவர் திடீரென்று காங்கிரஸ் கட்சியின் சீட்டு வாங்கிப் போட்டியிடுகிறார்.
யாருக்கு வாக்குகள் விழும்?
வாக்காளர் மறுசீரமைப்புக்கு முன் (சார்) இத்தொகுதியின் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,52,042 ஆக இருந்தது. அதில் ஆண்கள், 1,29,613 ஆகவும் பெண்கள்,1,22,421 என்ற அளவிலும் இருந்தனர். தற்போது மறுசீரமைப்புக்குப் பின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. தற்சமயம் 2,46,293 பேர் மொத்த வாக்காளர்களாக உள்ளனர். அதில் 1,26,763 பேர் ஆண்களாகவும் 1,19,521 பெண்களாகவும் உள்ளனர். சொல்லப்போனால் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெண்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. மாற்றுப் பாலினத்தவர் 9 ஆக அப்படியே தொடர்கின்றனர். இத்தொகுதியில் மொத்தம் 320 வாக்குச்சாவடிகள் உள்ளன.
பாமக இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் திமுக கூட்டணியில் நீடிக்கிறது. ஜிகே மணி கடந்த முறை திமுக வேட்பாளரை 21,186 வாக்குகளில் தோற்கடித்தார். அவரது மகன் இம்முறை, பாமக அல்லாத காங்கிரஸ் அடையாளத்தை ஏற்றுள்ளார். அரசியல் ரீதியாக அடிப்பட்ட புலியாக ஜி.கே.மணியின் நிலை மாறியுள்ளது. அதேசமயம் பாமக தன் தலைமையில் வலிமையாக உள்ளது என்பதை அன்புமணி நிரூபித்துக்காட்ட பென்னாகரம் ஒரு 'கீ' பாயிண்ட் ஆக உள்ளது.
வன்னியர் சமூகத்தினர் இத்தொகுதியில் 50% மேல் வாழ்கின்றனர். அதே சமயம் பட்டியலின மக்களின் வாக்கும் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக 15% உள்ளது. பிற சாதியினரும் உள்ளனர். தமிழக் குமரன் முன்பே இத்தொகுதிக்கு அறிமுகமான வேட்பாளர்தான். 2010 திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணனின் திடீர் மறைவால் இடைத்தேர்தல் நடைபெற்றபோது தமிழ்க் குமரன் களம் கண்டு, சுமார் 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
இப்போது 2026இல் பாமகவின் சார்பில் வி.செல்வமும் காங் சார்பில் தமிழ்க் குமரனும் நேரடியாக மோதுகின்றனர். தந்தையின் தனிப்பட்ட செல்வாக்கும், வன்னியர் அல்லாத பிறசாதியினரின் வாக்கும் தன்னைக் காப்பாற்றும் எனக் கணக்கிட்டுக் களம்புகுந்துள்ளார் தமிழ்க் குமரன்.
அதேபோல், பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அன்புமணிக்கு இடையேயான பிரிவை உண்டாக்கியவர் ஜிகே மணி என்று நம்பும் அன்புமணி அவரது மகனை வீழ்த்த பலகட்ட முயற்சிகளை எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆக, மகன்களின் மோதலால் இத்தொகுதி தேர்தல் களத்தில் செல்வாக்குப் பெற்றுள்ளது.
- கடற்கரய்
-
என் மூச்சு இருக்கும் வரை.. அன்புமணியுடன் சமாதானம் என்ற பேச்சிற்கே இடமில்லை.. ராமதாஸ் ஆவேசம்! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம்












Click it and Unblock the Notifications