ஆசையாய் காத்துள்ள பென்ஷன்தாரர்கள்.. அரசு ஊழியர்கள் ஓய்வூதிய திட்ட தேர்வுக்கு இன்றே கடைசி! செம சான்ஸ்
சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் இருந்து தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றிக் கொள்ள வழங்கப்பட்டிருந்த அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.. அந்தவகையில், மத்திய அரசு ஊழியர்கள் என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து யூபிஎஸ் எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு (Unified Pension Scheme - UPS) மாறுவதற்கு இன்றே கடைசி நாள் ஆகும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன? இந்த திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, 2004, ஜனவரி1ம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள், OPS எனப்படும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் நிலையான ஓய்வூதியத்தை பெற்று வந்தனர்.

ஆனால், 2004, ஜனவரி 1க்கு பிறகு, பணியில் சேர்ந்தவர்கள் NPS எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சந்தை சார்ந்த ஓய்வூதியத்தை பெற்றனர்..
இதில், NPS சந்தாதாரர்கள் மற்றும் ஊழியர் சங்கங்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தது.
தேசிய ஓய்வூதிய திட்டம்
இதில், NPS எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டம் கட்டாயமானது, ஆனால் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் விருப்பமானது.. அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள், புதிய ஒருங்கிணைந்த ஓய்வு திட்டத்தை Unified Pension Scheme UPS தேர்வு செய்வதற்கு இன்று அதாவது செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாகும்.
இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கும் ஊழியர்களுக்கு, ஒருமுறை மீண்டும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (NPS) மாற ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படும். இந்த வாய்ப்பை ஓய்வு பெறுவதற்கு 1 வருடம் முன்பு அல்லது விருப்ப ஓய்வூதியத் திட்டத்தைத் (VRS) தேர்வு செய்வதற்கு 3 மாதங்களுக்கு முன்பு பயன்படுத்தி கொள்ளலாம்.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்
ஒருவேளை, இந்த தேர்வு செய்யப்பட்டால், மீண்டும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) மாற முடியாது.
சமீபத்தில், தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டப் பயன்களை மத்திய அரசு ஊழியர்கள் பெறுவது தொடர்பாக பணி வரைமுறை செய்வதற்கான மத்திய குடிமைப் பணிகள் (தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட அமலாக்கம்) விதிகள் 2025ஐ, கடந்த 2.09.2025 அன்று மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை அரசிதழில் வெளியிட்டிருந்தது.
இன்றுடன் முடிகிறது அவகாசம்
அதில், "அரசு பணியில் 20 வருடங்கள் நிறைவு செய்தபிறகு விருப்ப ஓய்வு பெறுவதை ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்கள் தெரிவு செய்ய இந்த விதிகள் வகை செய்கின்றன.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் 25 வருடங்கள் நிறைவடைந்த பிறகு, மட்டுமே முழுமையான ஓய்வூதிய பயன்கள் கிடைக்கும். எனினும், 20 வருடங்கள் அல்லது அதற்கும் கூடுதலாக பணி நிறைவு செய்து விருப்ப ஓய்வு கோருவோருக்கு முழுமையான ஓய்வூதிய பயன்கள் 25ஆல் வகுக்கப்பட்டு சந்தாதாரருக்கு வழங்கப்படும்" என்று கூறப்பட்டிருந்தது.
அந்தவகையில், தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு (Unified Pension Scheme - UPS) மாறுவதற்கான கடைசி தேதி இன்றுடன் முடிகிறது.. இன்றைய காலக்கெடுவிற்குள் NPSன் கீழ் UPS விருப்பத்தை தேர்வு செய்யாத ஊழியர்கள், UPS விருப்பம் இல்லாமல் NPSன் கீழ் தொடரத் தேர்வு செய்ததாகக் கருதப்படுவார்கள்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications