பரனூரில் எஸ்கேப்.. பெருங்களத்தூரில் சிக்கிய மக்கள்.. நீண்ட தூரத்திற்கு அணிவகுத்த வாகனங்கள்
சென்னை: தீபாவளி விடுமுறை முடிந்து மக்கள் சாரைசாரையாக சென்னை திரும்பி வருகிறார்கள். இதன் காரணமாக சென்னையின் நுழைவு வாயிலாக உள்ள பெருங்களத்தூரில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்துள்ளன.
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் தினமும் பிற ஊர்களுக்கு இயக்கப்படும் 2,100 பேருந்துகள் பேருந்துகளுடன் கடந்த வியாழக்கிழமை 634 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. கடந்த நவம்பர் 9ம் தேதி மட்டும் அரசு பேருந்துகளில், மொத்தம் 1.36 லட்சம் பேர் பயணித்தனர். சென்னையில் இருந்து நவம்பர் 10ம் தேதி அன்று லட்சக்கணக்கானோர் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றனர். இதேபோல் தீபாவளிக்கு முதல் நாளான நவம்பர் 11ம் தேதி அன்று பகலிலும், இரவிலும் ஏராளமான மக்கள் சொந்த ஊர் சென்றாரகள்.

ஒட்டுமொத்தமாக தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சுமார் 20 லட்சம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று முதல் சென்னை திரும்ப தொடங்கி உள்ளனர். பொதுவாக தீபாவளி பண்டிகை முடிந்து சென்னைக்கு மக்கள் திரும்பும் போது, செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி தொடங்கி தாம்பரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும்.
இதற்கு காரணம், தாம்பரம் முதல் செங்கல்பட்டு பரனூர் வரை மக்கள் அடர்த்தி மிக அதிகமாக உள்ளது. சென்னைக்கு நிகரான சென்னையின் புறநகர் பகுதியிலும் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளது.. வழக்கமான வாகனங்களுக்கே அந்த சாலைகள் தாங்காது.. இந்த சூழலில் அதீதமாக சென்னைக்கு மக்கள் திரும்பி வரும் போது கடுமையான வாகன நெருக்கம் ஏற்படுவது இயல்பு. அந்த வகையில் சென்னையில் இருந்து தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற மக்கள்,, மீண்டும் இன்று சென்னை திரும்பி வருவதால் நெரிசல் அதிகரித்துள்ளது.
பரனூர் முதல் பெருங்களத்தூர் வரை சிக்னல் உள்ள பகுதிகள், வாகனங்கள் திரும்பு இடங்கள் அதிக அளவில் உள்ளன.. இந்த காரணங்களால் இன்று வாகன நெருக்கம் அதிகமாக உள்ளது.. தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.. பெருங்களத்தூரில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்துள்ளன. போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இன்று மாலைவிட நாளை காலை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் நாளை தான் அதிகப்படியான மக்கள் சென்னை திரும்புவார்கள்..
கிட்டத்தட்ட 90 சதவீதம் தமிழ்நாட்டு மக்கள் இந்த ஜிஎஸ்டி சாலையை பயன்படுத்தியே சென்னைக்குள் வருகிறார்கள்.. சென்னையை விட்டு செல்கிறார்கள் உயர்மட்டமேம்பாலம் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை அமைத்தால் மட்டுமே சென்னைக்கு மக்களுக்கு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இருக்கும்.. அதற்கு அரசும் ஒப்புதல் அளித்துவிட்டது. பணிகள் விரைந்து தொடங்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications