போகி கொண்டாட்டம்... சென்னையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகை.. வாகன ஓட்டிகள் அவதி
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை தீ வைத்து எரிப்பார்கள். அப்படி பலரும் ஒரே நேரத்தில் டயர் உள்பட பழைய பொருட்களை எரிப்பதால் சென்னை நகரமே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் போகி பண்டிகையின் போதும் காற்று மாசு கடுமையாக அதிகரிக்கும். அந்த வகையில் இன்றும் கடுமையாக காற்று மாசு அதிகரித்துள்ளது.

சென்னை முழுவதும் புகை மூட்டத்தால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். மணலி, ஆலந்தூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு காற்று மாசு காணப்படுகிறது.
Tamil Nadu: People celebrate #Bhogi in Chennai. It marks beginning of the four-day #Pongal festival. pic.twitter.com/U0ve0mc08V
— ANI (@ANI) January 14, 2020
Recommended Video
கிண்டி கத்திப்பாரா சாலையில் முன்பே செல்லும் வாகனங்கள் செல்வது தெரியாத அளவுக்கு புகை மூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே போகி பண்டிகை கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. கோவை, மதுரை, திருச்சி உள்பட பல நகரங்களில் காற்று மாசு அதிகரித்தது.












Click it and Unblock the Notifications