சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அகல் விளக்குகளை ஏற்றச் சொன்ன பிரதமர்.. பட்டாசு வெடித்துக் கொண்டாடி விட்ட மக்கள்!!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்கு அல்லது செல்போன் டார்ச்சுகளை ஒளிரவிட பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் விளக்குகளை அணைத்த கையோடு பொதுமக்கள் பட்டாசுகளையும் வெடித்தனர்.

Recommended Video

    விளக்குகளை ஏற்ற சொன்ன பிரதமர்... பட்டாசு வெடித்த மக்கள்

    கொரோனாவை முன்னிட்டு நாடு முழுவதும் லாக்டவுன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி இன்று இரவு 9 மணிக்கு பொதுமக்கள் மின்விளக்குகளை 9 நிமிடங்கள் நிறுத்த வேண்டும்; அப்போது அகல்விளக்குகள், மெழுகுவர்த்திகள், டார்ச் லைட், செல்போன் லைட் ஆகியவற்றை ஒளிர விடவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    People celebrates PM Modis invite with firecrackers

    இதனை ஏற்று இன்று நாடு முழுவதும் 9 மணிக்கு மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு, செல்போன் லைட்டுகள் ஒளிரவிடப்பட்டன.

    People celebrates PM Modis invite with firecrackers

    People celebrates PM Modis invite with firecrackers

    அத்துடன் நாட்டின் பல பகுதிகளிலும் இடைவிடாமல் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. பிரதமர் மோடி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்குத்தான் இந்த விளக்கேற்றுதலை கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    ஆனால் பொதுமக்களோ தீபாவளியைப் போல இடைவிடாமல் பட்டாசு வெடித்தனர். தற்போதைய லாக்டவுனால் காற்றின் மாசு குறைந்திருந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் இன்று இரவு ஒரே நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதும் சர்ச்சையாகி உள்ளது.

    பட்டாசுகளுடன் அமர்க்களம்

    லாக்டவுனால் 10 நாட்களாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர் பொதுமக்கள். எந்த ஒரு கொண்டாட்டமும் எதுவும் இல்லை.

    வீட்டின் நான்கு சுவர்களையும் மோட்டு வலையும்தான் பார்த்து கொண்டிருந்தனர் பொதுமக்கள். இப்போது பிரதமர் மோடி விடுத்த அழைப்பை பயன்படுத்தி பட்டாசுகளையும் வெடித்து கொண்டாடி தீர்த்துவிட்டனர் நம்ம மகாஜனங்கள்.

    English summary
    People celebrates PM Modi's invite to light lamps with firecrackers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X