இருக்கப்பட்டோர் துணி, நகைக்கடைகளில் .. இல்லாதபட்டோர் நகை அடகுக் கடைகளில்.. நேற்று நடந்தது இதுதான்!
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அடுத்து நேற்றைய தினம் கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அனைத்து கடைகளிலும் நிற்க இடமில்லாமல் குவிந்த கூட்டத்தால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதே வேளையில் நேற்று முன் தினம் மதியம் முதல் நேற்றைய தினம் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்கவும் அனுமதி அளித்தது.
முழு ஊரடங்கில் எந்த கடைகளும் திறக்கப்படாது என அறிவித்தததால் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

மளிகைக் கடை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள மளிகைக் கடைகள், மருந்து கடைகள், காய்கறி கடைகள், பழக் கடைகள் உள்ளிட்ட கடைகளில் மக்கள் சமூக இடைவெளியின்றி குழுமி இருந்தனர். போலீஸாரும், கடைக்காரர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு கூறியும் அதை யாரும் சட்டை செய்யவில்லை.

மக்கள் கூட்டம்
பேக்கரிகளிலும் அதிக மக்கள் கூட்டம் கூடி ஒரு வாரத்திற்கு தேவையான பிஸ்கெட், கேக்குகள், பிரட், ரஸ்க் உள்ளிட்டவைகளை வாங்கிச் சென்றனர். ஆரணியை சுற்றியுள்ள சுற்று வட்டார பகுதி மக்களுக்கு ஆரணி நகரத்தில்தான் அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்பதால் சுற்றியுள்ள கிராமத்தினரும் நேற்றைய தினம் ஆரணியில் குவிந்தனர்.

தாடி மாஸ்க்
மாஸ்க்களை அணிந்திருந்தனர். ஆனால் அவற்றை தாடி மாஸ்க்காகவே போட்டிருந்தனர். போலீஸாரை கண்டதும் மூக்கின் மீது மாஸ்க்கை இழுத்து விட்டனர். ஆரணியில் பொதுவாக இது போன்று ஒரு கூட்டம் பொங்கல், தீபாவளி காலங்களில் மட்டுமே இருக்கும். ஆனால் நேற்றைய தினம் இயற்கைக்கு மாறாக இத்தனை மக்கள் குவிந்தது கேஸ்களை அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

சாமான்
காய்கறி கடை, மளிகைக் கடை கூட பரவாயில்லை. துணிக்கடைகள், நகைக்கடைகளில் கூட மக்கள் பரவலாக கூடினர். அது போல் நகை அடகு வைக்கும் கடைகளிலும் மக்கள் கூட்டம் இருக்கத்தான் செய்தது. நகை அடகு வைக்கும் கடைகள் இத்தனை நாட்களாக திறக்கப்படாததால் கையில் காசு இல்லாத மக்கள் நேற்றைய தினம் திறந்தவுடன் நகைகளை அடகு வைத்து செலவுக்கு பணம் வாங்கி பின்னர் மளிகை சாமான்கள், காய்கறிகளை வாங்கியதை காண முடிந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications