“விஜய்யை கூட்டணியில் சேர்க்க ED மூலம் பாஜக பயமுறுத்தலாம்.. ஆனால்..” சொல்வது திருநாவுக்கரசர்
சென்னை: "தேர்தல் நேரத்தில் மக்களின் முடிவு விஜய்க்கு பக்குவத்தை வரவைக்கும். கரூர் விவகாரத்தில் விஜய்யுடன் ராகுல் காந்தி பேசியது கூட்டணிக்காக அல்ல. திமுக - காங்கிரஸ் கூட்டணி என்றும் உறுதியாக இருக்கும், எந்தவிதமான குழப்பமும் அதில் இருக்காது" என காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்தை வைத்தோ ஒரு தலைவருக்கு கூடுகின்ற கூட்டத்தை வைத்தோ தேர்தலின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், "திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. அது திடமாகத்தான் இருக்கிறது. அதிமுக கூட்டணிக்குள்ளேயே குழப்பம் இருக்கிறது அதனை சரி செய்வதற்கு பதிலாக எங்கள் கூட்டணியில் குழப்பம் இருக்கிறது என்று ஏன் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
அரசியலில் கூட்டணியில் சேர சொல்லி பதவியில் இருப்பதால் அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அவர்கள் கையில் இருப்பதால் நிர்பந்தம் கொடுக்கலாம். அப்படி நிர்பந்தம் கொடுப்பதற்கு பயந்து நெளிந்து விஜய் போகிறாரா என்பது அவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட விஷயம், அப்படி யாரையும் பயமுறுத்தி அச்சுறுத்தி எல்லாம் கூட்டணியை உண்டாக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. அது மாதிரி செய்து கூட்டணி அமைத்தால் நீடித்து இருக்க முடியாது.
விஜய் கட்சி தொடங்கும்போது அரசியலில் முதல் முறையாக பயணிக்கிறார், அவர் ஜாக்கிரதையாக பயணிக்க வேண்டும் என்று 50 ஆண்டுகாலம் நான் அரசியலில் இருப்பதால் அந்த அனுபவத்தில் கூறியிருப்பேன். காங்கிரஸ் கட்சி மத்தியிலும் ஆட்சியில் இல்லை, மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாததால் விஜய் காங்கிரஸ் கட்சியைப் பற்றி திட்டாமல் பேசாமல் இருக்கலாம் அதற்காக காங்கிரஸை ஏன் திட்டவில்லை என்று அவரிடம் கேட்டு திட்டு வாங்கவா முடியும். அவர் காங்கிரஸை திட்டாத வரை விமர்சிக்காத வரை சந்தோசம் மகிழ்ச்சிதான். காங்கிரஸ் கட்சியை விஜய் திட்டாமல் இருப்பதற்கு நன்றி.
பக்குவம் முதிர்ச்சி எல்லாமே அனுபவங்கள் தருவதுதான். விஜய் தற்போது தான் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். அவருக்கு உள்ள அனுபவத்தை வைத்து தான் கட்சி நடத்துகிறார். போகப் போக அவருக்கு அனுபவங்கள் வரலாம். அதோடு தேர்தல் நேரத்தில் மக்கள் கொடுப்பதுதான் பெரிய அனுபவமாக இருக்கும். எடப்பாடி பழனிச்சாமி எங்களுடைய கூட்டணியை வாழ்த்துவார் என்று எதிர்பார்க்க முடியாது அவர் எதிர்க்கட்சி தலைவர் என்பதால் விமர்சனம் செய்யத்தான் செய்வார். முதலில் அவருடைய கூட்டணி எப்படி இருக்கிறது என்பதை எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இன்னும் எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை முழுமையாக ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை. அவர் தனியாக ஒன்று கூறி வருகிறார். சமீபமாகத்தான் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அந்தக் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகளில் அதிமுகவில் இருந்து சென்ற டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்கமாட்டோம் என்று கூறியுள்ளார். இப்படி இருக்கையில் அந்த கூட்டணி முறையாக ஒழுங்காக இருக்கிறது என்றா அர்த்தம்? " எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications