கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் போற நேரம் பார்த்து.. திடீரென பறந்து வந்த கல்.. என்னங்க இது? காலையிலேவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மதுரவாயல் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே மாநகர பேருந்து மீது இளைஞர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் நோக்கிச் சென்ற பேருந்து, நிறுத்தத்தில் நிற்காததால் இளைஞர்கள் ஆத்திரம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் போதுமான அளவில் இருந்தும்.. கிளாம்பாக்கத்திற்கு கோயம்பேட்டில் இருந்து 5 நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்பட்டாலும்.. இந்த பேருந்து நிற்கவில்லை என்பதால் அங்கே இளைஞர்கள் கல்வீசி தாக்கி உள்ளனர்.

 People struggle to reach Kilambakkam bus stand due to no stoppage of buses

கிளாம்பாக்கத்தில் இந்த வார இறுதியில், அதாவது வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்று கிழமைகளில் கிளாம்பாக்கத்தில் அதிக அளவில் பேருந்துகள் இருந்துள்ளன. ஆனால் குறைவாகவே மக்கள் இருந்தனர்.

இதனால் மக்கள் எளிதாக சொந்த ஊர்களுக்கு செல்ல முடிந்தது. பேருந்துகளும் முழு கூட்டமின்றி மக்கள் எளிதாக பயணிக்க முடிந்தது. கடந்த இரண்டு நாட்களாக தினமும் கிளாம்பாக்கத்திற்கு கூடுதலாக 120 பஸ்கள் இயக்கப்பட்டது.

நாள் ஒன்றுக்கு 1,215 பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டது. நிமிடத்திற்கு நிமிடம் பேருந்துகள் இருந்த நிலையில் மக்களுக்கு போதுமான வகையில் பேருந்துகள் இருந்ததால் ஊருக்கு செல்பவர்கள் எளிதாக செல்ல முடிந்தது.

கிளாம்பாக்கம் பயணம்: ஒரு லட்சம் பேர் கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரே நாளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்த பேருந்து நிலையத்தில்.. பண்டிகை இல்லாத காலத்தில் மாபெரும் சாதனையாக இது பார்க்கப்படுகிறது.

கடந்த 30.12.2023 அன்று கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறந்து வைக்கப்பட்டது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை பொது மக்களின் வசதிக்கேற்ப, 30.01.2024 முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் இருந்து 710 (80%) அரசுப் பேருந்துகள் மற்றும் மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 160 (20%) அரசுப் பேருந்துகள் என ஆக மொத்தம் 870 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மற்றும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் (30.01.2024) மாதவரம் பேருந்து முனையத்தில், தென் மாவட்டங்களுக்கான பேருந்து இயக்கத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள். மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் திருச்சி-18, சேலம்-17. விருத்தாசலம்-6, கள்ளக்குறிச்சி-16, விழுப்புரம்-16. கும்பகோணம்-14, சிதம்பரம்-5. நெய்வேலி-11. கடலூர் (வழி) புதுச்சேரி, திண்டிவனம்-5, புதுச்சேரி (வழி) திண்டிவனம்-10. திருவண்ணாமலை (வழி) செஞ்சி-22, போளூர் & வந்தவாசி-20 உள்ளிட்ட வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அமைச்சர் ஆய்வு; சமீபத்தில் கூட போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தினை ஆய்வு மேற்கொண்டு, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் விவரங்களை கேட்டறிந்தார்கள். இவ்வாய்வின் போது, விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ராஜ்மோகன், முதன்மை நிர்வாக அலுவலர் ஜெ.பார்த்தீபன் மற்றும் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

கடந்த மாதம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து செங்கல்பட்டு. திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் திருச்சி-118. சேலம்-66. விருத்தாசலம்-30. கள்ளக்குறிச்சி-50, விழுப்புரம்-59. கும்பகோணம்-52, சிதம்பரம்-21. நெய்வேலி -46, கடலூர் (வழி) புதுச்சேரி, திண்டிவனம்-32, புதுச்சேரி (வழி) திண்டிவனம்-35, திருவண்ணாமலை (வழி) செஞ்சி-125, போளூர்-30, வந்தவாசி-46 உள்ளிட்ட வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சாதனை; இந்த நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் புதிய சாதனையை படைத்துள்ளது.

ஒரு லட்சம் பேர் கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரே நாளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்த பேருந்து நிலையத்தில்.. பண்டிகை இல்லாத காலத்தில் மாபெரும் சாதனையாக இது பார்க்கப்படுகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லை என்று ஒரு பக்கம் மக்கள் சிலர் புகார் அளித்து வருகின்றனர். போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். சமீபத்தில் கூட மக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கே பேருந்துகள் வராமல் போக.. மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்தால் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அதிகாலை கிளாம்பாக்கத்திலிருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை புகார் எழுந்ததை தொடர்ந்து போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்தனர்.

இப்படிப்பட்ட நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை 1 லட்சம் பயணிகளை ஊருக்கு அனுப்பி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சாதனை செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+