மகளிர் உரிமை தொகை வாங்குபவர்களுக்கு.. வருது சர்ப்ரைஸ்.. எதிர்பார்க்காத முடிவு.. நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகளிர் உரிமைத் தொகைக்கான நிதி, ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் அதைத் தொடர்ந்த விடுமுறை நாட்களை முன்னிட்டு, ஒரு நாள் முன்னதாகவே இன்று வழங்கப்படவுள்ளது. வங்கிகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நடைமுறை மிக எளிமையானது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் ஐந்து ஆவணங்களை சமர்ப்பித்தால் போதுமானது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

Tamil Nadu Government Notification magalir urimai thogai

மகளிர் உரிமைத் தொகை

இந்த முகாம்களில், மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் விரைவாகப் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களின் பணிகள் பத்து நிமிடங்களுக்குள் நிறைவு செய்யப்படுகின்றன. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. விண்ணப்பிக்க ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, கைபேசி எண், வங்கி கணக்கு பாஸ்புக் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானவை. வேறு எந்தக் கூடுதல் ஆவணங்களும் கேட்கப்படுவதில்லை. தகுதியிருந்தும் உரிமைத் தொகை பெறாதவர்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் விண்ணப்பிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தகுதியான அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இத்திட்டம் இன்று தொடங்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்த உறுதிமொழியை அளித்தார். சென்னையின் 15 மண்டலங்களிலும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளன.

மகளிர் உரிமைத் தொகை கண்டிப்பாக கிடைக்கும்

ஒவ்வொரு வார்டிலும் நவம்பர் மாதம் வரை இரண்டு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை 109 முகாம்கள் செயல்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த முகாம்கள் மூலம் அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடையும் என்றும், உரிமைத் தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

'உங்களுடன் ஸ்டாலின்' என்ற பெயரில், நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் இந்த முகாம்களுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் - மகளிர் உரிமைத் தொகை

முகாமிற்கு வந்திருந்த சில பெண்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். "நாங்கள் இங்கு வந்ததும், மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தை அவர்களே கொடுத்து, எங்களுக்காக அதை நிரப்புகிறார்கள். மேலும், எங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதையும் அதிகாரிகள் உடனடியாகத் தெரிவிப்பதால், வேலைகள் சுலபமாக முடிந்துவிடுகின்றன" என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள், "ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, கைபேசி எண், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை மட்டும் கொண்டுவந்தால் போதும். இந்த முகாமில் ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். அதுமட்டுமின்றி, வங்கி கணக்கு இல்லையென்றால், இங்கேயே கணக்கு தொடங்கி, அடுத்த நிமிடமே உரிமைத் தொகைக்கும் விண்ணப்பிக்கலாம்" என்றனர்.

மற்றொரு பெண் கூறுகையில், "எல்லா ஆவணங்களும் என்னிடம் இருக்கின்றன. ரேஷன் கார்டில் பிரச்சினை இருந்தால், அதையும் இங்கேயே மாற்றி, அதன்பிறகு உடனடியாக அந்த ரேஷன் கார்டை வைத்து மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். எல்லாமே ஒரே இடத்தில் முடிக்கும் வகையில் தரமான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+