Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரம்பூரில் சென்னையின் 4-வது ரயில் முனையம்.. ரயில்வேயிடம் இருந்து பறந்து வந்த ஆர்டர்.. சூப்பர் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து, சென்னையின் 4-வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை மாற்றிட ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. ரூ.428 கோடி ரூபாய் திட்டமதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் அருகே உள்ள ரயில்வே கிடங்கை அகற்றிவிட்டு புதிய ரயில் முனையம் அமைக்க ரயில்வேத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சென்னை, அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டவங்களில் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது.. இதன் காரணமாக சென்னையில் மக்கள் நெருக்கம் வழக்கத்தைவிட அதிகரித்துவிட்டது. சென்னையில் இப்போது கூடுதலாக மக்கள் தொகை உருவாக வாய்ப்பே இல்லை என்கிற அளவிற்கு வீங்கிவிட்டது. இடமும் அதற்கு சற்றும் இல்லை. இதனால் செங்கல்பட்டு முதல் தாம்பரம் வரையிலும், ஸ்ரீபெரும்புதூர் முதல் பூந்தமல்லி வரையிலும், திருவள்ளூர் முதல் ஆவடி வரையிலும், திருவெற்றியூர் முதல் மீஞ்சூர் வரையிலும் மக்கள் அடர்த்தி மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது .

perambur railway

தற்போதைய நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்த்தால் 2 கோடிக்கு மேல் மக்கள் தொகை இருக்கும். தினமும் 2 கோடி பேருக்கான பயணத் தேவையை பூர்த்தி செய்வது சவாலானது. சென்னையில் புறநகர் ரயில்கள் மட்டும் இல்லை என்றால் மோசமான நிலை ஏற்படும். தற்போதைய நிலையில் சென்னையில் ரயில் கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.. இப்போது சென்னைக்கு வருவோர் ரயில் இறங்க வேண்டும் என்றால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் முனையங்கள் உள்ளன.

வடமாநிலங்கள் மற்றும் மேற்கு மாவட்ட ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருகின்றன. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள், ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி(தென்மாவட்டங்கள் வழியாக வரும் ரயில்கள்) ரயில்கள் சென்னை எழும்பூருக்கு வந்து செல்கின்றன. இதில் எழும்பூர் ரயில் நிலையம் சிறியது என்பதால், அதிகப்படியான ரயில்களை நிறுத்தி வைக்க முடியாத நிலை இருந்தது. இதன் காரணமாக தாம்பரம் ரயில் நிலையத்தை 3வது ரயில் முனையமாக மேம்படுத்த ரயில்வே திட்டமிட்டது, அதை 3வது முனையமாகவே தற்போது மாற்றிவிட்டது.

இனி தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்படும் புதிய ரயில்கள் தாம்பரம் ரயில் முனையத்தில் இருந்தே புறப்படும் என்று அறிவித்தும்விட்டது ரயில்வே. தற்போது நாகர்கோவில் ரயில், அந்தோதியா ரயில், பல்வேறு வடமாநில ரயில்கள், கோவை செல்லும் சில சிறப்பு ரயில்கள் தாம்பரம் வரை தான் வருகின்றன. தற்போது சென்னை எழும்பூர் கடற்கரை இடையே நான்காவது வழித்தடம் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

இதனிடையே தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களை சென்னைக்கு அருகில் உள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்த வசதி இருக்கும் நிலையில், மேற்கு மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் வந்து செல்லும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பக்கத்தில் தாம்பரம் போல் இடவசதி உள்ள ரயில் நிலையங்கள் இல்லை.. தற்போதைய நிலையில் சென்ட்ரலுக்கு அடுத்து உள்ள ரயில் நிலையமாக அரக்கோணம் 80 கிமீ தூரத்தில் இருக்கிறது. இதனால் சென்னையில் பெரம்பூரை ஒட்டிய பகுதியில் 4வது ரயில் முனையம் அமைக்க தெற்கு ரயில்வே யோசித்து வந்தது.

தற்போது சென்னைக்குள் வரும் ரயில்கள் பெரம்பூர் ரயில் நிலையத்தில் நிற்கின்றன. ஆனால் போகும் போது பெரம்பூரில் நிற்காது. அங்கு பெரிய அளவில் இடவசதிகள் இல்லை. இதனால் அங்கு முனையம் அமைக்கப்பட வாய்ப்பு இல்லாத நிலையே இருந்து வந்தது. இந்நிலையில் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டி இடம் உள்ள காரணத்தால் அங்கு 4வது ரயில் முனையம் அமைக்கலாம் என்று தெற்கு ரயில்வே யோசித்தது. ஆனால் அதனை ரத்து செய்த தெற்கு ரயில்வே சென்னையின் 4-வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை மாற்றிட ஒப்புதல் வழங்கியிருக்கிறது. ரூ.428 கோடி ரூபாய் திட்டமதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் அருகே உள்ள ரயில்வே கிடங்கை அகற்றிவிட்டு புதிய ரயில் முனையம் அமைக்க ரயில்வேத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


முன்னதாக சென்னை சென்ட்ரலில் நெரிசலைக் குறைக்க புதிய முனையம் அமைக்கும் யோசனை கடந்த 2008-ம் ஆண்டே முன்வைக்கப்பட்ட போதிலும், இருப்பினும், இட நெருக்கடி மற்றும் நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் காரணமாக நிறைவேறவில்லை. தற்போது பெரம்பூரில் 4-வது ரயில் முனையம் அமைக்க ரயில்வே அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியதுடன் பணிகளுக்கு ஒப்புதலும் வழங்கி உள்ளது. 200 ஏக்கர் பரப்பளவில் பெரம்பூர் கேரஜ் மற்றும் லோகோ பணிமனைகள் இருக்கின்றன. இங்குள்ள ரயில்வே கிடங்கை அகற்றிவிட்டு தான் புதிய ரயில் முனையம் அமைக்கப்பட உள்ளது.

perambur railway

ரயில்வே அமைச்கத்தின் இந்த உத்தரவு காரணமாக ஏற்கனவே பெரம்பூரில் மெட்ரோ காரிடர் 3 மற்றும் காரிடர் ஐந்து ஆகியவை அருகிலேயே உள்ளன. இதனால் புதிதாக அமையும் 4வது முனையம் பயணிகளுக்கு ரயில்களை பிடிக்க மிகவும் வசதியாக இருக்கும் என்கிறார்கள். அதேநேரம் ஆவடி, திருவள்ளூர் மக்கள், ஆவடியில் 4வது முனையம் அமைத்திருக்கலாம் என்று தங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். பெரம்பபூர் ரயில் முனையம் உருவானால், பெங்களூர், மும்பை, திருவனந்தபுரம் மற்றும் ரேணிகுண்டா வழியாக வட மாநிலங்கள் செல்லும் ரயில்களுக்கு சேவை வழங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பெரம்பூர் ரயில் நிலையம், சென்னை சென்டரலில் இருந்து கூப்பிடும் தூரத்தில் இருப்பதால் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+