தமிழ்நாடு நாள்: 1967 ஜூலை 18-ல் தமிழ்நாடு என பெயர் சூட்டி பேரறிஞர் அண்ணா சட்டசபையில் பேசியது என்ன?
சென்னை: தமிழ்நாடு என சென்னை மாகாணத்துக்கு பெயர் சூட்டுவதால் தனிநாடாகிவிடாது; இந்தியாவின் ஒருபகுதியாக இருந்துகொண்டுதான் இந்த பெயரை சூட்டுவதால் சர்வதேச சிக்கல்கள் எழாது என்று சட்டசபையில் மறைந்த தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா உரையாற்றினார்.
Recommended Video
1967-ம் ஆண்டு ஜூலை 18-ல் தமிழ்நாடு சட்டசபையில் பேரறிஞர் அண்ணா பேசியதன் ஒரு பகுதி:
தமிழ்நாடு என்று பெயரிடுகின்ற இந்த நிகழ்ச்சி இந்த அவையிலே இன்றைய தினம் உறுப்பினர்களாக இருக்கின்ற ஒவ்வொருவருடைய வாழ்நாளிலும் மிகுந்த மகிழ்ச்சியையும், நல்ல எழுச்சியையும் தரத்தக்க ஒரு திருநாள் ஆகும். இந்தத் திருநாளைக் காண்பதற்கு பன்னெடுங்காலம் காத்துக் கொண்டிருக்க நேரிட்டதே என்பதுதான் மகிழ்ச்சியின் இடையிலே நமக்கு வருகின்ற ஒருதுயரமே தவிர, நெடுங்காலத்திற்கு முன்னாலே நடைபெற்றிருக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சியை மிகுந்த காலம் தாழ்த்தி இன்றைய தினம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்றாலும் இதிலே எல்லாக்கட்சியினரும் ஒன்றுபட்டு இந்தத் தீர்மானத்திற்கு அவர்கள் தங்களுடைய ஆதரவைத் தந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும். நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமன் கூட இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கிறார்களே தவிரவேறில்லை. அதிலே சில ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறோம் என்று சொல்லியிருப்பது, எதிர்க்கட்சியில் இருப்பவர்களுடைய கடமை என்ற வகையில் ஆலோசனைகளைச் சொல்லவேண்டுமென்ற முறையிலே தவிர,எதிர்க்கிறார்கள் என்று இல்லை.

ஆகையினால் இந்தத் தீர்மானம் எல்லோருடைய ஆதரவையும் பெற்று இந்தியப் பேரரசுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.இந்தியப் பேரரசிலே மிகுந்த செல்வாக்கோடு இருக்கின்ற இரண்டொரு தலைவர்களுடன் உரையாடுகின்ற வாய்ப்புக்கிடைத்த போது இதைப்பற்றி அவர்கள் சொல்லும்போது, தமிழகச் சட்டமன்றத்தில் இது நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படுமானால் இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்துவதிலே தயக்கம் இருக்காது என்பதனை முன்கூட்டியேஎன்னிடத்தில் எடுத்துச்சொல்லியிருக்கிறார்கள். அங்குள்ள பல தலைவர்கள்,அதனை அரசை நடத்துகிறவர்கள்கூட ஏற்றுக் கொள்ளுகிறார்கள் என்று எண்ணத்தக்க விதத்தில் பத்துநாட்களுக்கு முன் பாராளுமன்றத்தில் இந்த மாநிலத்தைப் பற்றிப் பேசவேண்டிய வாய்ப்பு கிடைத்த நேரத்தில் அங்குள்ள உள்துறை அமைச்சர் சவான் "மெட்ராஸ்ஸ்டேட்" என்று பேசிப்பழக்கப்பட்டவர் மிகுந்த அக்கறையோடும் மிகுந்தகவனத்தோடும் தமிழ்நாடு என்றுதான் பேசியிருக்கிறார்.
ஆக இதை அவர்களும் ஏற்றுக்கொண்டு அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒரு நல்ல வாய்ப்பைஇன்றைய தினம் இந்த அவையிலே நாம் பெற்றிருக்கிறோம்.மதிப்புமிக்க ம.பொ.சி. அவர்கள் இதிலே மிகுந்த மன எழுச்சிபெற்றது இயற்கையான தாகும். அவர்கள் பல ஆண்டுகளாக "தமிழ்நாடு" என்ற பெயர் இந்தநாட்டுக்கு இடப்பட வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறையோடுபாடுபட்டவர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தோழர்களும், திராவிட முன்னேற்றக் கழகம் என்பதிலே 'திராவிட'என்பதை இணைத்துக்கொண்டிருப்பதால் "தமிழ்நாடு" என்பதிலே அக்கறை இல்லாமல் போய் விடுமோ என்று சிலர் எண்ணிய நேரத்தில் "தமிழ்நாடு" என்றுபெயரிடுதல் வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தநாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்திவந்து கொண்டிருக்கிறோம்.
காங்கிரஸ் கட்சியி லுள்ளவர்களும், மற்றவர்கள்கொண்டு வருகிறார்களே என்பதனாலே முன்னாலே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும் இலக்கியத்தில் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டிருந்தாலும்,இன்றைய தினம் அவர்களும்"தமிழ்நாடு" என்று சொல்லிக் கொள்வதில் மிகுந்த பெருமைப்படு கிறார்கள்.
ஆகையினால் இந்தத் தீர்மானம்எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் இந்தஅவையிலே நிறைவேற்றப்பட இருக்கிறது என்று கருதுகிறேன்.அப்படிப்பட்ட ஒரு வெற்றி கிடைக்குமானால் அது இன்று கழகத்திற்கு வெற்றியல்ல, தமிழரசுக் கழகத்திற்கு வெற்றியல்ல, மற்ற கட்சிகளுக்கு வெற்றியல்ல,இது தமிழுக்கு வெற்றி, தமிழருக்குவெற்றி, தமிழ் வரலாற்றுக்கு வெற்றி,தமிழ்நாட்டுக்கு வெற்றி என்ற விதத்தில்அனைவரும் இந்த வெற்றியிலே பங்குகொள்ளவேண்டும்."தமிழ்நாடு என்ற பெயர் இருந்தால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அறிந்துகொள்ளமாட்டார்கள்" என்பதுமட்டுமல்ல, நம்முடைய தொழில் அமைச்சராக முன்னாள் இருந்த வெங்கட்ராமன்அவர்கள், "ஒரு நாட்டுக்கும், இன்னொருநாட்டுக்கும் இடையே செய்து கொள்ளக்கூடிய ஒப்பந்தம் எல்லாம் திருத்திஎழுதப்பட வேண்டிவரும், அதனாலேசிக்கல்கள் விளையும்" என்றெல்லாம்சொன்னார்கள். அதிலிருந்து அவர்கள்வெளிநாடுகளுக் கெல்லாம் போய்வந்தார்கள் என்பதைத் தான் கவனப்படுத்துகிறார்களே தவிர, உண்மையாகச்சிக்கல்கள் இருக்கின்றனவாஎன்பதைக் கவனப்படுத்த வில்லை.
மதிப்பிற்குரிய நண்பர் பாலசுப்பிரமணியம் அவர்கள் எடுத்துச் சொன்னபடி "கோல்டு கோஸ்ட்" என்பது "கானா"ஆகி விட்டது. அதனால் எந்தவிதமான சர்வ தேசச் சிக்கல்களும் ஏற்பட்டுவிடவில்லை.தமிழ்நாடு தனி நாடாகி இந்தப்பெயரை இடவில்லை, இந்தியாவில் ஒருபகுதியாக இருந்து கொண்டு இந்தப்பெயரை இடுவதால் இதிலே சர்வதேசச்சிக்கல்கள் எழுவதற்கு நியாயமில்லை.
சட்டமன்றத் தலைவர் அவர்களே,வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கின்றஇந்த நன்னாளில் "தமிழ்நாடு" என்றுநான் சொன்னதும் "வாழ்க" என்றுஅவை உறுப்பினர்கள் சொல்லுவதற்குத் தங்களுடைய அனுமதியைக்கோருகிறேன். இவ்வாறு பேரறிஞர் அண்ணா உரையாற்றினார்.
-
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
என்னோட பேவரிட் தோனியை மிஸ் பண்ற பீலிங்கை அவாய்ட் பண்ண முடியல.. ஸ்டாலின் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக்












Click it and Unblock the Notifications