நினைவுகளாக உறைந்துவிட்ட அன்புமகள் செங்கொடியை நெஞ்சிலேந்தி...சிறைவாசலில் பேரறிவாளன் தாயார் உருக்கம்
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் இன்று ஜாமீனில் விடுதலையானார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், நினைவுகளாக உறைந்துவிட்ட அன்புமகள் செங்கொடியை நெஞ்சிலேந்தி என பேரறிவாளன் உள்ளிட்டோருக்காக தீக்குளித்து மாண்ட செங்கொடி குறித்து உருக்கமாக பேசினார்.
Recommended Video
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் ஆயுள் தண்டனை சிறைவாசம் அனுபவித்து வந்தனர். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக சிபிஐயின் பல்நோக்கு கண்காணிப்புக் குழு விசாரணை முடிவடையாத நிலையில் தம்மை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உச்சநீதிமன்ற வழக்கு
இவ்வழக்கு கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் 7 தமிழரை விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இதன் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார். உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆளுநரின் இந்த தாமதம் குறித்து அதிருப்தி தெரிவித்தனர். அத்துடன் சிபிஐ-ன் பல்நோக்கு கண்காணிப்பு குழுவானது ராஜீவ் காந்தி படுகொலையில் சர்வதேச சதி குறித்து விசாரணை நடத்துகிறது; அதற்கும் 7 தமிழர் விடுதலைக்கும் தொடர்பு இல்லை எனவும் கூறியிருந்தனர்.

ஜாமீனில் விடுதலை
இதனிடையே பேரறிவாளனுக்கு அண்மையில் 10-வது முறையாக ஒரு மாத பரோல் விடுப்பை நீட்டிப்பு செய்தது தமிழக அரசு. இந்நிலையில் பேரறிவாளன் வழக்கில் கடந்த 9-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது, பேரறிவாளனை ஜாமீனில் விடுதலை செய்ய முடிவு செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் 31 ஆண்டுகால சிறைவாசம், பேரறிவாளனின் நன்னடத்தை உள்ளிட்டவை அடிப்படையில் அவரை ஜாமீனில் விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அற்புதம்மாள் பேட்டி
இதனைத் தொடர்ந்து பேரறிவாளனின் பரோல் விடுப்பு முடித்து வைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையானார் பேரறிவாளன். அப்போது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் அற்புதம்மாள் கூறியதாவது: நீதிக்கான 31 ஆண்டுகால போராட்டத்தில், மிகவும் முக்கியமான காலகட்டம் இது. விடுதலை என்ற முழுமை நிலையை எட்ட காலம் இன்னும் கைகூடவில்லை. இப்போது கிடைத்திருக்கின்ற பிணை ஓர் இடைக்கால நிவாரணம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எனது மகன் உள்ளிட்ட அனைவரும் முழுமையாக விடுதலை பெறும்வரை உங்கள் அனைவரது ஆதரவும் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களின் நீதிக்கான போராட்டத்திற்கு துணை நின்று வரும் தமிழக முதல்வர், தமிழக அரசு மற்றும் எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அனைத்து அமைப்பினருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

செங்கொடி...உருக்கம்
என்னுள் நினைவுகளாக உறைந்துவிட்ட அன்பு மகள் செங்கொடியை நெஞ்சிலேந்தி, இத்தனை ஆண்டுகளாக எனது மகனின் உண்மை நிலை உணர்ந்து ஆதரவளித்து வரும் ஊடக நண்பர்கள் , திரைப்படத்துறையினர், வழக்கறிஞர்கள், மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், தாய்மார்கள், பொதுமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலும், தமிழகம் தாண்டி வசிக்கும் வெகு மக்களின் ஆதரவும் புரிதலுமே 31 ஆண்டுகளுக்குப் பிறகாவது இந்த நிலையை எட்டக்கூடிய வாய்ப்பை தந்துள்ளது. முழுமையான விடுதலை கிடைத்து அதற்கான சூழல் ஏற்படும் நாளில் விடுதலைக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லும் வாய்ப்பாக நானும் எனது மகனும் காத்திருக்கிறோம். தற்போது தற்காலிகமாக கிடைத்துள்ள பிணையின் போது அனைவரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அற்புதம்மாள் கூறினார். மேலும் பேரறிவாளனின் வழக்கறிஞர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார் அற்புதம்மாள்.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications