தந்தை பெரியார்: சாதிச் சங்கிலிகளை உடைத்து, மூடநம்பிக்கைச் சுவர்களைத் தகர்த்த ஒரு பெரும் புயல்!
சென்னை: இன்று தந்தை பெரியாரின் பிறந்தநாள். சாதிக் கொடுமைகளைக் கண்டு வெகுண்டெழுந்து, சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அழித்தொழிக்கப் புறப்பட்ட சீர்திருத்தவாதி பெரியார். அடிமை விலங்குகளை உடைத்து, ஆதிக்க மனோபாவத்தைக் களைய அவர் ஆற்றிய பணிகள் ஏராளம். பெண்ணுரிமைக்காகப் பாடுபட்டார் பெரியார். அவர் இன்றும் வாழ்கிறார், என்றைக்கும் வாழ்வார்.
பெரியார், செப்டம்பர் 17, 1879 அன்று ஈரோட்டில் வெங்கடப்ப ராமசாமியாகப் பிறந்தார். ஒரு வசதியான வணிகக் குடும்பத்தில் பிறந்த ராமசாமி, ஐந்து ஆண்டுகள் மட்டுமே முறையான பள்ளிப்படிப்பைப் படித்தார். பின்னர் அவர் 12 வயதில் தனது தந்தையின் தொழிலில் சேர்ந்தார். ஆயினும், அவரது அமைதியற்ற மனம் ஒருபோதும் சுவர்களால் கட்டுப்படுத்தப்படவில்லை. தனது வீட்டிற்கு வந்த வைணவ துறவிகளை அவர் கூர்ந்து கேட்டு, தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை உள்வாங்கிக் கொண்டார். மேலும் மெதுவாக அதன் முரண்பாடுகளைக் கேள்வி கேட்கத் தொடங்கினார்.

ராமசாமியால், சமூகத்தில் பின்னிப் பிணைந்திருந்த பாசாங்குத்தனத்தை புறக்கணிக்க முடியவில்லை. மதக் கட்டுக்கதைகள் ஏன் தர்க்கத்திற்கு முரணாக இருந்தன? மனித கண்ணியத்தை இழிவுபடுத்த சாதி ஏன் பயன்படுத்தப்பட்டது? என அவரது மனம் கேள்வி எழுப்பியது. மிக விரைவில், மதம் வஞ்சக ஆயுதமாகத் திரிக்கப்பட்டு, மக்களை மூடநம்பிக்கை மற்றும் அடிபணிதலுக்குக் கட்டுப்படுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை அவர் உணர்ந்தார்.
அரசியலில் முதல் படி
1919 ஆம் ஆண்டு, அவர் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். ஈரோடு நகராட்சித் தலைவராக மக்கள் பணியில் ஈடுபட்டு வந்த பெரியார், கார்ங்கிரஸில் இணைந்ததும் அந்தப் பதவியையும் துறந்தார். காதி பொருட்களை ஊக்குவித்தல், அந்நியத் துணிகளைப் புறக்கணித்தல், தீண்டாமையை ஒழித்தலில் ஈடுபாட்டுடன் செயலாற்றினார். 1921 இல் கள்ளுக்கடைகளில் மறியல் போராட்டங்களை நடத்திச் சிறை சென்றார். அவரது மனைவி நாகம்மையும் அவரது சகோதரியும் அவருடன் போராட்டங்களில் இணைந்தனர்.
பின்னர், காங்கிரஸ் கட்சியே ஆழமான சாதிய எண்ணங்களைக் கொண்டுள்ளது என உணர்ந்தார். 1922 இல் பின்தங்கிய சமூகங்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏற்காததால் ஏமாற்றமடைந்த ராமசாமி 1925 இல் காங்கிரஸை விட்டு வெளியேறினார்,
பின்னர் அவர் ஒரு சபதத்தையும் எடுத்தார். "நான் தமிழ்நாட்டில் காங்கிரஸை என்றென்றும் அதிகாரத்திலிருந்து அகற்றுவேன்" என உறுதி எடுத்தார். வரலாறு அவரது சபதத்தை நிறைவேற்றியது. பெரியாரின் சீடரான அண்ணா முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, காங்கிரஸ் கட்சி கடந்த 58 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அதிகாரத்திலிருந்து விலகி உள்ளது.
வைக்கம் சத்தியாகிரகம்
திருவிதாங்கூர் சமஸ்தானம் வைக்கத்தில், சாதி தீண்டாமை தலைவிரித்து ஆடியது. தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்படுபவர்களை கோயில்களில் நுழைவதைத் தடுத்தது. 1924 ஆம் ஆண்டில், வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் சத்தியாகிரகம் தொடங்கியபோது, ராமசாமியும் நாகம்மையும் நீதிக்கான போர்க்களத்தில் அணிவகுத்துச் சென்றனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஒரு பேரணியாக மாறினார்.
விடுதலைக்கான பல போராட்டத்தில் கலந்து கொண்ட ராமசாமிக்கு கிடைக்காத பெயரும், புகழும் இப்போராட்டத்தின் மூலம் கிடைத்தது. அவரது அச்சமற்ற எதிர்ப்பானது அவருக்கு "வைக்கம் வீரர்" என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தது.
தீண்டாமைக்கு எதிரான நெருப்பு
1925 ஆம் ஆண்டில், ராமசாமி சாதி அமைப்பை எதிர்த்து முழங்கினார். "பறவைகள், விலங்குகள் மற்றும் புழுக்கள் கூட சாதிகளாகப் பிரிந்து செல்வதில்லை. பகுத்தறிவு பெற்ற மனிதன் ஏன் இவ்வளவு தாழ்ந்து போக வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பினார். மூடநம்பிக்கைக்கு அடிமைப்படுத்தப்பட்ட எதையும் சமூகம் எரித்து நொறுக்க வேண்டும் என்று பேசினார்.

சுயமரியாதை இயக்கம்
1925 முதல், அவர் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். மூடநம்பிக்கை, பகுத்தறிவற்ற சடங்குகள் மற்றும் சாதி படிநிலைகளுக்கு எதிரான ஒரு பெரிய போராட்டமாக முன்னெடுத்தார் பெரியார். குடி அரசு (1925) மற்றும் கிளர்ச்சி (1928) போன்ற தீவிரமான உரைகள், பத்திரிகைகள் மற்றும் அணிதிரட்டல் மூலம், மக்களுக்கு அறிவூட்டத் தொடங்கினார்.
அவரது இயக்கம் பெண் கல்வி, விதவை மறுமணம், அர்ச்சகர்கள் இல்லாத திருமணங்கள் மற்றும் சாதி அடிப்படையிலான தொழில்களை ஒழித்தல் ஆகியவற்றை ஆதரித்தது. பிறப்பு அல்லது மூடநம்பிக்கையால் கட்டப்படாமல், ஒவ்வொரு ஆணும் பெண்ணும் உயர்ந்து நிற்கக்கூடிய ஒரு சமூகத்தை அவர் உருவாக்க நினைத்தார்.
1929 இல் இராமசாமி சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில், தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்குப் பின்னால் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார்.
நீதிக் கட்சி
1937 இல் ஆங்கிலேயர்கள் தமிழ்ப் பள்ளிகளில் இந்தி மொழியைத் திணித்தபோது, பெரியார் தமிழ் அடையாளத்தின் தளராத பாதுகாவலராகச் செயல்பட்டார். போராட்டங்களுக்கு தலைமை தாங்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட அவர், நீதிக் கட்சியின் தலைவராக உருவெடுத்தார், அதன் தீபத்தை மிகவும் தீவிரமான நோக்கத்தை நோக்கி ஏந்திச் சென்றார். மொழியியல் திணிப்புக்கு எதிராக மட்டுமல்ல, பிராமணிய ஆதிக்கத்தின் ஒவ்வொரு சின்னத்திற்கும் எதிராக அவர் சமரை அறிவித்தார்.
திராவிடர் கழகத்தின் பிறப்பு
1944 ஆம் ஆண்டு, பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக மாற்றினார். அதன் வாயிலாக பகுத்தறிவு மற்றும் சமத்துவத்தின் நற்செய்தியை அவர் பரப்பினார். மூடப் பழக்கங்கள், சடங்குகளைக் கண்டித்தார், பெண்களின் உரிமைகளை உயர்த்தினார், மேலும் ஒரு சில சாதிகளின் மேலாதிக்கத்தை உடைத்தார். அவரது சமரசமற்ற கொள்கை, தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களிடையே வேரூன்றியிருந்தது.
சமத்துவத்துக்கான அறைகூவல்
பெரியாரின் இறுதிக்காலத்திலும் கூட, அவரது கொள்கை நெருப்பு ஒருபோதும் மங்கவில்லை. பெங்களூரில் நடந்த அகில இந்திய அலுவல் மொழி மாநாட்டில் (1958), இந்தி திணிப்புக்கு எதிராக அவர் முழங்கினார், ஒற்றுமைக்கான உண்மையான பாலமாக ஆங்கிலத்தை வலியுறுத்தினார். 1963 ஆம் ஆண்டு, அவர் வட இந்தியாவுக்குப் பயணம் செய்து, சாதி ஒழிப்பு ஒவ்வொரு இந்தியரின் உயர்ந்த கடமையாக அறிவித்தார்.
பெரியார் வாழ்கிறார்
டிசம்பர் 19, 1973 அன்று சென்னை தியாகராய நகரில் அவர் ஆற்றிய கடைசி உரை, சமத்துவம் மற்றும் பகுத்தறிவுக்கான இறுதி அழைப்பாகும். ஐந்து நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 24, 1973 அன்று, தனது 94 வயதில் காலமானார் பெரியார்.
பெரியார் வாழ்கிறார் - சாதிக்கு அடிபணிய மறுக்கும் ஒவ்வொரு மனிதரின் குரலிலும், தனது உரிமையை கோரும் ஒவ்வொரு பெண்ணிலும் கல்வி, கோட்பாட்டை கேள்வி கேட்கத் துணியும் ஒவ்வொரு பகுத்தறிவாளரிடமும் பெரியார் இன்றளவும் வாழ்கிறார். என்றென்றைக்கும் வாழ்வார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications