பெரியார் 48-வது நினைவுநாள்... சிந்தனை பொக்கிஷமாக திகழும் அவரது கருத்துக்கள்!
சென்னை: பெரியாரின் 48-வது நினைவுதினமான இன்று, அவர் ஆற்றிய சொற்பொழிவுகளில் இருந்து சில வரிகள் மட்டும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.
சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்கு சமம், மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு உள்ளிட்ட பெரியாரின் பொன்மொழிகள் பிரபலமானவை.
ஆனால் அதே நேரத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் எண்ணத்தில் உதித்த, பெரும்பாலனவர்கள் அறியாத அவரது தீப்பொறி சிந்தனைகளில் சில மட்டும் இங்கே;

பெரியார் சிந்தனை
''பிச்சைக் கொடுப்பதும் பிச்சை எடுப்பதும் சட்டவிரோத காரியமாக கருதப்பட வேண்டும். அப்படியானால் தான் மனிதன் சுயமரியாதையோடு வாழமுடியும்.'' (குடி அரசு நாளிதழ் 21.04.1945)
''பொதுத் தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லைகள் அவன் தனது லட்சியத்திற்கு கொடுக்கும் விலை'' (விடுதலை நாளிதழ் 20.09.1962)

சுயமரியாதை சுடர்
''சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதல்ல. மற்றவர்கள் நன்மை அடைவதை பார்த்து மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம் தான்.'' (குடி அரசு 17.11.1940)
''நாம் அரசியல் துறையில் முன்னேறி மாற்றம் பெற்றிருக்கிறோமே தவிர, சமுதாய துறையில் இன்னமும் பிற்போக்கான நிலையில் தான் இருக்கின்றோம். இந்த நிலை மாற வேண்டும்.'' (விடுதலை 26.08.1967)

குடி அரசு
''மதத்தை வைத்துக்கொண்டு சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று புறப்பட்ட ஒருவர் கூட இதுவரை ஒரு சிறிய வெற்றியை கூட பெற முடியவில்லை.'' (குடி அரசு 07.04.1929)
''ஒரு சமூகம் என்றிருந்தால் அச்சமூகத்தில் ஏழைகள் இல்லாமலும், மனசாட்சியை விற்றுப் பிழைப்பவர்கள் இல்லாமலும் செய்வது தான் சரியான சமூக சீர்த்திருத்தப் பணியாகும்.'' (குடி அரசு 30.01.1927)

அறிவுப்பேழை
''பொதுக்காரியத்தில் ஈடுபடுகிறவர் எவராவது தன் கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரத்திற்காக பொதுக் காரியத்தைப் பயன்படுத்திக் கொள்பவரேயாவார்.'' (அறிவுப் பேழை ; 1976)
''வலிவுள்ளவனாகவோ, பணக்காரனாகவோ, தந்திரசாலியாகவோ, அயோக்கியனாகவோ, இல்லாதவன் இந்த உலகத்தில் வாழ்வதற்கு இடம் இல்லாமல் போய்விட்டது. இவைகளை சீர்த்திருத்த ஒரு காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா..?'' (குடி அரசு 04.05.1930)
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications