பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை!
சென்னை: தவெக தலைவர் விஜய்யின் நாளைய பெரம்பூர் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைவர் விஜய் நாளை அவர் போட்டியிடவிருக்கும் பெரம்பூர் தொகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்குவதாக இருந்தது.
300 பேர் கூடக்கூடிய இடத்தில் 3,000 பேர் கூடினால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் மாற்று இடம் கோரி காவல்துறையிடம் விண்ணப்பிக்க தவெகவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் விஜய் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். அதேசமயம் அவர் தன் பிரச்சாரத்தையும் தொடங்க இருக்கிறார். நாளை ஒரே நாளில் 5 இடங்களில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார் விஜய்.
நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்படும் விஜய் காலை 10 மணிக்கு பெரம்பூரின் எம்.கே.பி நகரின் பஸ் டெப்போ அருகே முதல் பாய்ன்ட்டில் பேசுகிறார். அதைத் தொடர்ந்து கொளத்தூரின் செந்தில் நகரிலும், வில்லிவாக்கம் ஐ.சி.எஃப் சிக்னல் அருகேயும் அண்ணாநகர் ரவுண்டானாவிலும் கோயம்பேடு மேம்பாலம் அருகேயும் என 5 பாய்ன்ட்டுகளில் விஜய் பேச இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நாளை பெரம்பூரில் நடத்த திட்டமிட்டிருந்த தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. விஜய் நாளை பெரம்பூரில் எம்.கே.பி நகர் பேருந்து நிறுத்தம் அருகே நாளை விஜய் பரப்புரைக்கு அனுமதி கேட்டிருந்தது. தவெக தேர்வு செய்த இடம் நெருக்கடியான இடம் என்பதால் பிரச்சாரம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
300 பேர் கூடக்கூடிய இடத்தில் 3,000 பேர் கூடினால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் பிரசாரத்திற்கு மாற்று இடம் கேட்டு விண்ணப்பிக்க காவல்துறை அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து பெரம்பூர் தொகுதியின் மாவட்டச் செயலாளர் சிவா, தவெக உயர்மட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிடோர் தேனாம்பேட்டை தவெக வார் ரூம் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா










Click it and Unblock the Notifications