செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்து ஷாக்.. ED வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு தள்ளுபடி
சென்னை: செந்தில் பாலாஜி தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை வரும் 22 ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக கைது செய்தது. இந்த வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்து இறுதி தீர்ப்புக்காக தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் செந்தில்பாலாஜி புதிதாக 2 மனுக்களை தாக்கல் செய்தார். அதில், 'சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் வங்கி தொடர்பான அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. எனக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் கையால் எழுதி திருத்தப்பட்டுள்ளது. ஆகவே, இந்த ஆவணங்களை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி அதன் உண்மை தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும்.
வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய மனு மீது மீண்டும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதிக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார். இந்த மனுக்கள் சென்னை அமர்வு முதன்மை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், அமலாக்கத்துறையால் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் கையால் எழுதி திருத்தப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
அமலாக்கத்துறை வாதிடுகையில், 'இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல. ஆவணங்கள் அனைத்தும் வங்கியில் இருந்து தான் பெறப்பட்டது. விசாரணையை நீண்ட காலம் இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கிலே இதுபோன்ற மனுக்களை செந்தில் பாலாஜி தரப்பினர் தாக்கல் செய்து வருகின்றனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று கூறியது.
அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை வரும் 22 ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 48 -வது முறையாக வரும் 22 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications