ஒரே நாளில் 2 கேஸ்.. தவெக அங்கீகாரம் ரத்து? விஜய்க்கு எதிரான மனுக்கள்! இன்று மதுரை கோர்ட்டில் விசாரணை
சென்னை: கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி என்பதால் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று தவெக வழக்கு தொடுத்துள்ள நிலையில், தவெக கட்சியின் அங்கீகாரத்தையே ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை தந்து வருகிறது.. மேற்கண்ட மனுக்களின் மீதான விசாரணை இன்றைய தினமே நடைபெறுவது மிகப்பெரிய பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் தமிழக மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.
கரூரில் நேற்று முன்தினம் நடிகர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கரூர் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்..

இதில் சுகுணா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.. இதனால் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக உயிரிழந்துள்ளது..
சிபிஐ விசாரணை கேட்கும் தவெக
இந்த சம்பவம் திட்டமிட்ட சதி என தமிழக வெற்றிக்கழகத்தினர் குற்றம்சாட்டிய நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த வக்கீல் அணியினர் இதுதொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவை கொண்டு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டின் விடுமுறை கால நீதிபதி தண்டபாணியிடம் முறையிட்டனர்.
இதை கேட்ட நீதிபதி, "இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யுங்கள். வழக்கு நாளை (அதாவது இன்று) மதியம் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என்றார். நீதிபதியின் இந்த அறிவுறுத்தலை தொடர்ந்து, தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் இன்று காலை மனு தாக்கல் செய்யப்படுகிறது.
இன்று மதியம் விசாரணை
மதுரை ஐகோர்ட்டுக்கு தற்போது தசரா விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மதியம் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இதனிடையே, கரூர் கூட்டத்தின்போது நிபந்தனைகளை பின்பற்றவில்லை என்றும் இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணமாக தவெக கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தவெக கட்சி அங்கீகாரம்
கரூர் சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் இதுதொடர்பாக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதாவது, மதுரை மானகிரியை சேர்ந்த வக்கீல் செல்வகுமார், இமெயில் மூலமாக தன்னுடைய மனுவை மதுரை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்திருக்கிறார்.
அதில், "தவெக கூட்டத்தில் சுமார் 10000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டபோதிலும், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் நெரிசலான இடத்தில் கூடியிருந்தனர்.
அலட்சியம், தவறான நிர்வாகம், சட்டப்பூர்வ அனுமதிகளை மீறியதன் விளைவாக, அந்த கூட்டத்தில் பங்கேற்ற சிறார்களும், பெண்கள் உள்பட 40 அப்பாவி மக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். மேலும் பலர் சிகிச்சையில் உள்ளனர்.
மதுரை ஹைகோர்ட்டில் மனு
கரூர் கூட்டத்தில் சிறார், பெண்கள் பங்கேற்பதை தடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். இதன் விளைவாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிடுவது அவசியமாகிறது. எனவே ஏராளமான உயிரிழப்புகளுக்கு காரணமான தமிழக வெற்றிக்கழக கட்சியின் அங்கீகாகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுபோலவே, சிவகங்கை மாவட்டம் ஆளவந்தான்பட்டியை சேர்ந்த வக்கீல் முருகேசன் என்பவரும், தவெகவுக்கு எதிரான மனுவை மதுரை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.
கரூர் துயர சம்பவத்துக்கு காரணமான நடிகர் விஜய் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல் முருகேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒரே நாளில் 2 வழக்கு
இதுபோலவே கரூர் சம்பவத்துக்கு காரணமான தவெகவுக்கு எதிராக, இன்று காலையில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது.. இம்மனுக்கள் மீதான விசாரணை இன்று பிற்பகலில் நடக்கும் என தெரிகிறது.
கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி என்பதால் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று தவெக வழக்கு தொடுத்துள்ள நிலையில், தவெக கட்சியின் அங்கீகாரத்தையே ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை தந்து வருகிறது.. மேற்கண்ட மனுக்களின் மீதான விசாரணை இன்றைய தினமே நடைபெறுவது அதைவிட பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் தமிழக மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.
-
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக்












Click it and Unblock the Notifications