பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்வு - சென்னையில் இன்றைய விலை எவ்வளவு தெரியுமா

பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 108 ரூபாய் 21 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 98 ரூபாய் 21 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாக

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 108 ரூபாய் 21 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 98 ரூபாய் 21 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.

Recommended Video

    சென்னை: ரூ.108ஐ கடந்தது பெட்ரோல் விலை.. டீசல் விலையும் ஜெட் வேகத்தில் ஏற்றம்!

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து விற்பனை செய்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக விலை உயர்ந்தது ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாயை எட்டியது. எதிர்கட்சியினரின் போராட்டம், பீகார் மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மீண்டும் மெதுவாக உயர்ந்தது.

     சதமடித்த பெட்ரோல், டீசல் விலை

    சதமடித்த பெட்ரோல், டீசல் விலை

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. தமிழகம், மேற்கு வங்க மாநிலம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா 2வது அலையின்போது சற்று கட்டுக்குள் இருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தொடர்ந்து பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.

    விலை குறைந்தது

    விலை குறைந்தது

    தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. இதனைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை நாடுமுழுவதும் கணிசமாக குறைந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகளும் வரியை குறைத்ததால் பெட்ரோல்- டீசல் விலை கணிசமாக குறைந்தது.

    4 மாதங்கள் உயராத பெட்ரோல், டீசல் விலை

    4 மாதங்கள் உயராத பெட்ரோல், டீசல் விலை

    இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் முதல் சென்னையில் பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா,மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றதால் கடந்த மாதம் வரை பெட்ரோல், டீசல், விலை உயர்த்தப்படவில்லை.

     கச்சா எண்ணெய் விலை உயர்வு

    கச்சா எண்ணெய் விலை உயர்வு

    உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 12 நாட்களில் பெட்ரோல், டீசல் தினசரியும் 70 காசுகள் வரை உயர்த்தப்பட்டு வருகிறது. இன்றைய தினம் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 108 ரூபாய் 21 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 98 ரூபாய் 21 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது. இதுவரை லிட்டருக்கு 7 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 10வது முறையாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+