சென்னை தபால் நிலையங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு... தி.வி.கவை சேர்ந்த 4 பேர் கைது

திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் 1.30 மணிக்குள்மயிலாப்பூர், மந்தைவெளி தபால் நிலையங்களுக்கு, இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் பெட்ரோல் குண்டுகள் சரமாரியாக வீசியுள்ளனர்.
பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் தபால் நிலையத்தில் ஏற்பட்ட லேசான தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
மயிலாப்பூர் தபால் நிலையத்தின் உள்ளே 5 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஜன்னல் கதவுகளை திறந்து பெட்ரோல் குண்டுகளை உள்ளே வீசியதில், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தானியங்கி முத்திரை ஒட்டும் எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.
மந்தைவெளி தபால் நிலையத்தில் 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. ஆனால், இங்கு அதிகளவு சேதம் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரண்டு தபால் நிலையங்களில் இருந்தும் வெடிக்காத 4 பெட்ரோல் குண்டுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தை அடுத்து, மயிலாப்பூர், மந்தைவெளி ஆகியப் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த தென்சென்னை மாவட்ட செயலர் உமாபதி உட்பட 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் தாம் பங்கேற்கப் போவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிவித்திருந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே தபால் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications