10 நாட்களாக உயரவில்லை.. நெருங்கும் 5 மாநில தேர்தல்.. பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லை!
சென்னை: 5 மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொடர்ந்து 10 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கடந்த இரண்டு மாதமாக இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது. கடந்த ஜனவரியில் இருந்து பிரென்ட் க்ருட் எண்ணெய் விலை உயர்ந்து வந்தது. பிரென்ட் க்ருட் எண்ணெயின் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 69.36 டாலரை தொட்டது. 2.62 டாலர் இது உயர்ந்தது.

இதன்பின் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது. இந்த நிலையில் 5 மாநில தேர்தல் நெருங்கும் நிலையில் தொடர்ந்து 10 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தினமும் சர்வதேச நிலவரத்தை பொறுத்து எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் டீசல் விலையை தீர்மானம் செய்கிறது. ஆனால் தற்போது விலையில் எந்த மாற்றமும் செய்ய கூடாது என்று அரசு மூலம் இந்த நிறுவனங்களுக்கு கோரிக்கைகள் சென்றுள்ளதாக தகவல்கள் வருகிறது.
இதனால் கடந்த 10 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. சென்னையில் பெட்ரோல் விலை 93.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 86.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.டெல்லியில் பெட்ரோல் விலை 97.17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 81.47 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 11 பைசா உயர்ந்து 87.24 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 85.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பெங்களூரில் பெட்ரோல் விலை 94.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 87.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 97.57 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 88.60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலைதான் இதுவரை விற்கப்பட்டதிலேயே அதிக விலை ஆகும்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications