படுமோசம்.. 16 நாட்களில் 14வது முறையாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. இன்று புதிய உச்சம் தொட்டது!
சென்னை: நாடு முழுக்க பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தொடர்ந்து 14 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பொருளாதார மந்த நிலை, எரிபொருள் விலை ஏற்றம், அத்தியாவசிய பொருள் விலை ஏற்றம் காரணமாக மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் இது அரசியல் பிரச்சனையாக உருவெடுத்து மக்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர்.
இலங்கை, பாகிஸ்தானில் மக்கள் போராட்டம் நடக்க இதுவே காரணம். பெரு நாட்டிலும் இதனால் மக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். இந்த நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது.

இந்தியா பெட்ரோல்
இந்த நிலையில்தான் இந்தியாவிலும் தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 16நாட்களுக்கு முன் முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. இந்த 16 நாட்களில் 2 நாட்கள் தவிர மற்ற 14 நாட்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. தினமும் 30 - 80 பைசா வீதம் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்தியா பெட்ரோல் விலை
இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்தது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்தது. டீசல் லிட்டருக்கு ரூ.100.94க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 16 நாட்களில் இதுவரை பெட்ரோல் விலை 9.56 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

டீசல் விலை
டீசல் விலை 9.86 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் விற்கும் மெட்ரோ நகரங்களில் மும்பை முதலிடத்தில் உள்ளது. மும்பையில் பெட்ரோல் விலை 120 ரூபாயை நெருங்குகிறது. அங்கு பெட்ரோல் விலை 84 பைசாவும், டீசல் விலை 85 பைசாவும் உயர்த்தப்பட்டது. மும்பையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 120.51 க்கு விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 104.77 க்கு விற்கப்படுகிறது.

என்ன நிலவரம்
டெல்லியில் இன்று பெட்ரோல் விலை 80 பைசாவும், டீசல் விலை 80 பைசாவும் உயர்த்தப்பட்டது. டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 105.41 விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 96.67 க்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் விலைவாசியும் உயர தொடங்கி உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் பட்சத்திலும் இந்தியாவில் எரிபொருள் விலை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications