கட்டுக்கடங்லையே..மும்பையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ115.50; சென்னையில் ரூ106.35க்கு விற்பனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மும்பையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ115.50-க்கும் சென்னையில் ரூ106.35க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள்தான் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. கொரோனா பரவலைத் தடுக்க லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட காலத்தில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.

ஆனால் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 171 நாட்களில் 70 முறைக்கு மேல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.+

 பெட்ரோல் டீசல் விலை அதி உச்சம்

பெட்ரோல் டீசல் விலை அதி உச்சம்

நாள்தோறும் பைசா கணக்கில்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுகிறது. ஆனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது பெட்ரோல் விலை குறைந்தபட்சம் 1 லிட்டர் ரூ106 என்றும் அதிகபட்சம் ரூ115 என்ற நிலையும் உள்ளது.

 மும்பையில் ரூ115

மும்பையில் ரூ115

நாட்டிலேயே மிக அதிகமாக மும்பையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ115.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. மும்பையில் 1 லிட்டர் டீசல் 106.62க்கு விற்பனை செய்யப்பட்டது.

Recommended Video

    அடுத்த அதிர்ச்சி! எகிறிய கேஸ் சிலிண்டர் விலை.. கலக்கத்தில் வியாபாரிகள்!
     சென்னையில் நிலவரம்

    சென்னையில் நிலவரம்

    மும்பையைத் தொடர்ந்து கொல்கத்தாவில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ110க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ110.15; 1 லிட்டர் டீசல் விலை ரூ101.56 எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் தலைநகர் டெல்லியில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ109.69க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ106.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் 1 லிட்டர் டீசல் ரூ102.59க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     பொதுமக்கள் குமுறல்

    பொதுமக்கள் குமுறல்

    இப்படி பெட்ரோல், டீசல் நாள்தோறும் விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து கொண்டே செல்வதால் படிப்படியாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகப் பெரும் சுமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிக்கும் முறைக்கு முடிவு கட்டுவதுதான் சரியாக இருக்கும் என்பது பொதுமக்களின் கோரிக்கை. இத்தனைக்கும் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் மீதான வரி குறைக்கப்பட்டும் கூட பெட்ரோல் விலை ரூ105ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறதே என்பது பொதுமக்களின் ஆதங்கம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+