பிஎப் பணம் வாங்குவோருக்கு சர்ப்ரைஸ்.. 2025 ஜூலை தற்காலிக சம்பள பட்டியல்! வித்தியாசத்தை பாருங்க.. செம
சென்னை: பிஎஃப் உறுப்பினர்கள் ஒரு வருடத்தில் 6 முறை பணம் எடுக்கலாம்.. குறிப்பிட்ட காரணங்கள் இல்லாமல் கூட பணம் எடுக்கலாம். ஆனால், 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை எடுக்க முடியாது என்று நிதியமைச்சகம் 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது.. ஏடிஎம், யூபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதியும் தீபாவளி பண்டிகைக்குள் வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் நடப்பாண்டு 2025 ஜூலை மாதத்திற்கான தற்காலிக சம்பள பட்டியல் தரவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.
EPFO என்று சொல்லப்படும் பிஎஃப், ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மாத சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் குறிப்பிட்ட தொகையாகும்.

அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, பிஎஃப் கணக்குகள் கட்டாயம் நடைமுறையில் இருக்கும். இந்த முறைப்படியானது 12% வரை ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.
பிஎஃப் பணம் பலன்கள்
அதாவது, நீங்கள் பணிபுரியும் நிறுவனமும் அதே அளவிலான தொகையை உங்களுடைய அக்கவுண்டில் ஒவ்வொரு மாதமும் பங்களித்து வரும் நிறுவனம் செய்யும் பங்களிப்பானது 3 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.. இதில் 3.67% EPFக்கும், 8.33% EPSக்கும், சிறிய அளவிலான பங்கு இன்சூரன்ஸுக்கும் செல்கிறது.
ஊழியர்கள் பணியில் இருக்கும்வரை இந்த பிஎப் கணக்கும் அமலில் இருந்துக்கொண்டேயிருக்கும். ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்த பணத்தை மீண்டும் திரும்ப எடுத்துக்கொள்ளலாம்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO இந்த சமூக நலத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஓய்வு காலத்தில் பெறும் ஓய்வூதிய நன்மைகள் தவிர பல்வேறு நன்மைகள் பிஃப் மூலம் ஊழியர்களுக்கு கிடைக்கின்றன...
பிடித்தம் செய்யப்படும் பணம்
பிடித்தம் செய்யப்படும் பணத்தை, ஊழியர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றாலும், இதற்காக ஒருகுறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.. எனினும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட ஒருசில காரணங்களுக்காக குறிப்பிட்ட தொகையை எடுக்க ஊழியர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும், EDLI திட்டத்தின்கீழ், ஊழியர் முன்கூட்டியே உயிரிழக்க நேர்ந்தால், அவரது குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் பலன்களும் வழங்கப்படுகின்றன.
பென்ஷன் பலன்கள்
ஆனால், இந்த பென்ஷன் பலன்களை பெறுவதற்கு நீங்கள் EPS அக்கவுண்டில் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்காவது பங்களித்திருக்க வேண்டும். தற்போது ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியான அதிகபட்ச சம்பளம் ரூ.15000 ஆகும்.. எனவே, ஒவ்வொரு மாதமும் 1250 ரூபாய் என்ற அதிகபட்ச பென்ஷன் பங்களிப்பு செய்ய வேண்டும்.
இதில் ஒரு சில ஊழியர்களுக்கு மட்டும் EPFO விதி மாற்றங்களை செய்துள்ளது. அதாவது, ஒரு மாதத்துக்கு மட்டும் ஒருவர் வேலை செய்திருந்தாலும் கூட அவருக்கு EPF பென்ஷன் பெறுவதற்கான பலன்கள் வழங்கப்படுகின்றன.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம்
இந்நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் 2025 ஜூலை மாதத்திற்கான தற்காலிக சம்பள பட்டியல் தரவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.
அந்த லிஸ்ட்டில், 2025 ஜூலையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் 9.79 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.. பெருகி வரும் வேலைவாய்ப்புகள், தொழிலாளர்களுக்கான சலுகைகள் குறித்த விழிப்புணர்வு , தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் வெற்றிகரமான திட்டங்கள் போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.
சம்பள பட்டியல்
அதேபோல, சம்பள பட்டியலில் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் முன்னணியில் உள்ளனர்.. இந்த பிரிவில் 5.98 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்...
அதேபோல, சம்பள பகுப்பாய்வு பட்டியலில் முன்னணியில் உள்ள 5 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் 60.85 சதவீதம் புதிய உறுப்பினர் சேர்க்கை அதிகரித்துள்ளது.. இதில் டாப்பில் உள்ள மாநிலம் மகாராஷ்டிராவாகும்.. அங்கு 20.47% புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்துள்ளது..
இதற்கு அடுத்தபடியாக, தமிழ்நாடு, குஜராத், தெலங்கானா, உத்தரப்பிரதேசம், ஹரியானா, டெல்லி மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஜூலை மாதத்தில் 5 சதவீதத்துக்கும் அதிகமான உறுப்பினர் சேர்க்கையை கொண்டுள்ளன.
சபாஷ் முன்னேற்றம்
மொத்தத்தில் ஜூலை மாத சம்பள லிஸ்ட்டில் 21.04 லட்சம் உறுப்பினர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் இந்த லிஸ்ட்டை ஒப்பிட்டு பார்த்தால், நிகர சம்பள பட்டியல் உறுப்பினர்கள் இணைப்பு 5.55 சதவீதம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல, தொழிலாளர் பிஎஃப் நிறுவனத்தின் தொடர் முயற்சிகள், வலுவான கூடுதல் வேலைவாய்ப்புகள், பணியாளர் நலன் போன்றவற்றையும் இந்த பட்டியல் உணர்த்துவதாக உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications