பிஎஃப் பணத்தை வாங்குவோருக்கு செம வாய்ப்பு..வருங்கால வைப்பு நிதி திட்டம்! பென்ஷன் பிரச்சனைக்கு தீர்வு
சென்னை: மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டலத்துக்குட்பட்ட 6 மாவட்டங்களில் "நிதி உங்கள் அருகில்" மற்றும் இ.எஸ்.ஐ.சி -சுவிதா சமகம் இணைந்து இன்று காலை 9.00 மணிக்கு குறைதீர்க்கும் முகாமை துவங்கியிருக்கின்றன. ஓய்வூதியதாரர்கள், சந்தாதாரர்கள் போன்றோர், இந்த முகாம்களில் பங்கேற்று, தங்களது புகார்களை தந்து தீர்வு கண்டு வருகிறார்கள். வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் முகாம், இன்று எந்தெந்த இடங்களில் நடந்து வருகிறது தெரியுமா? 6 மாவட்ட மக்களும் நோட் பண்ணிக்குங்க.
வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள். சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்குப் பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப். டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சனைகளுக்கும், இ.எஸ்.ஐ.சி பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

"நிதி உங்கள் அருகில்" என்ற குறை தீர்ப்பு முகாம் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் இம்முகாம் அவ்வப்போது நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த முகாம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், புதுச்சேரி, திருப்பத்தூர் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்டு, பலரும் பங்கேற்று தங்களுக்கான பலனை பெற்றிருந்தனர்.
இன்றும் முகாம்
இந்நிலையில், மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டலத்துக்குட்பட்ட தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் "நிதி உங்கள் அருகில்" மற்றும் இ.எஸ்.ஐ.சி சுவிதா சமகம் இணைந்து முகாமை நடத்த திட்டமிட்டன.. அதன்படி, இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு இந்த குறைதீர்க்கும் முகாம் ஆரம்பாகியிருக்கிறது. .
பிஎஃப் உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வேலை பார்க்கும் நிறுவனங்களிடம் இருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்வது, ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிப்பது, இ-நாமினேஷன் தாக்கல் செய்வது மற்றும் ஒப்பந்ததாரர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட சேவைகள் இந்த முகாம்களில் வழங்கப்பட உள்ளன.
எங்கு நடக்கின்றன முகாம்கள்
மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் தேனி விருதுநகர் திண்டுக்கல் ஆகிய மாவட்டத்தில் முகாம் நடைபெற உள்ளது. மதுரையில் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி,1/132, நகரி முதல் சோழவந்தான் சாலை, ராயபுரம், சோழவந்தானிலும், சிவகங்கையில், ஃபெமினா மஹால், சத்ய மூர்த்தி தெரு, அரண்மனை வாசலிலும் முகாம் நடக்கிறது.
அதேபோல, ராமநாதபுரத்தில் இன்ஃபேண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், தேனியில் கூட்ட அரங்கு, கண்ணம்மா மெஸ், கம்பம் மெயின் ரோட்டிலும், விருதுநகரில், ஸ்ரீ எஸ். ராமசாமி நாயுடு நினைவு கல்லூரி, சடையம்பட்டி, சாத்தூரிலும், திண்டுக்கல்லில் அக்ஷயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சீலைப்பாடியிலும் இன்றைய முகாம்கள் துவங்கியிருக்கின்றன..
யார் யார் பலன் பெறலாம்
வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்குப் பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப். டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சனைகளுக்கும், இஎஸ்ஐசி பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள் அனைவரும் மேற்கண்ட இடங்களில் நடக்கும் முகாம்களில் பங்கேற்று தங்கள் குறைகளுக்கு தீர்வு பெறலாம்..
அதேபோல, t.ly/nPTt என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிலும் தங்களது விவரங்களை பதிவு செய்து, இந்த முகாம்களில் பங்கெடுத்து கொண்டு, தங்களது பிரச்சனைகள், கோரிக்கைகளை சொல்லி பலன் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஃப் உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோரின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவே "நிதி உங்கள் அருகில்" என்ற பெயரில் குறை தீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. இந்த முகாம்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், சந்தாதாரர்கள் உள்ளிட்டோர் தங்களது பிரச்சனைகளை களைந்து கொள்ள முடியும்.. அந்தவகையில், வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் முகாம், தற்போது 6 மாவட்டங்களில் நடக்க போகிறது..
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மதுரை மண்டலத்துக்குட்பட்ட 6 மாவட்டங்களில் "நிதி உங்கள் அருகில்" மற்றும் இ.எஸ்.ஐ.சி -சுவிதா சமகம் இணைந்து இன்று காலை 9.00 மணிக்கு குறைதீர்க்கும் முகாமை நடத்துகின்றன.
வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள். சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்குப் பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப். டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சனைகளுக்கும், இ.எஸ்.ஐ.சி பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications