PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் சூழ்நிலையில், ரேஷன் கார்டு வைத்திருக்கும் பொதுமக்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் இதுவரை கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்கள், இன்னும் 2 நாட்களுக்குள் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் 25ஆம் தேதி இதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நியாயவிலைக் கடை ஊழியர்கள், கடைக்கு வரும் பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பலருக்கு இந்த தகவல் ஏற்கனவே தெரிந்திருந்தாலும், சிலர் கவனிக்காமல் விட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது.

அதனால், கைவிரல் ரேகை பதிவு செய்யாமல் இருப்பவர்கள் உடனடியாக தங்களது அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் இருக்கும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு
குறிப்பாக தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்த்யோதயா குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள் இந்த நடைமுறையை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன. இதுவரை பதிவு செய்யாதவர்கள் மார்ச் 25ஆம் தேதிக்குள் பதிவு செய்யாவிட்டால், அவர்களின் பெயர் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KYC சரிபார்ப்பு
வழக்கமாக ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் போது, கார்டில் பெயர் உள்ளவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அளவுகள் வழங்கப்படுகின்றன. அதனால், ஒருவரின் பெயர் நீக்கப்பட்டால், அவருக்கு வழங்கப்படும் பொருட்களின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் பெறுவதில் சிக்கல் உருவாகலாம். எனவே இந்த சிக்கல்களை தவிர்க்க, தாமதிக்காமல் விரைவாக கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு
வேலை அல்லது பிற காரணங்களால் தங்கள் சொந்த ஊர்களை விட்டு வெளியூர் அல்லது வெளிமாநிலங்களில் தங்கி இருப்பவர்களும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கூட தங்களது அசல் ரேஷன் கார்டை எடுத்துச் சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் நடைமுறையில் இருப்பதால், எந்த மாநிலத்தில் இருந்தாலும் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் இந்த பதிவு செய்யும் வசதி உள்ளது.
ரேஷன் அடையாளம் சரிபார்ப்பு
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து குடும்ப அட்டைகளிலும் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது விரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயம் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாதவர்கள், தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் குறிப்பிட்ட தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள்
மேலும், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், ரேஷன் கார்டு தொடர்பான குறைத்தீர்ப்பு முகாம்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தேர்தல் முடியும் வரை இந்த முகாம்கள் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் கார்டு தொடர்பான பிற பிரச்சனைகளை தீர்க்க விரும்பும் பொதுமக்கள் ஜூன் மாதம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு
அதிகாரப்பூர்வமாக கால அவகாசம் நீட்டிப்பு அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. எனவே, கால அவகாசம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்த்து காத்திருக்காமல், மார்ச் 25ஆம் தேதிக்குள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது. ஒருவேளை குறிப்பிட்ட தேதிக்குள் பதிவு செய்ய முடியாமல் போனால், பெயர் நீக்கப்பட்ட பிறகு மீண்டும் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். அதற்கு கூடுதல் காலதாமதம் ஏற்படும் என்பதால், உடனடியாக நடவடிக்கை எடுப்பது பொதுமக்களுக்கு மிக அவசியமானதாகும்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications