களத்தில் இறங்கும் மாஸ்டர் மைண்ட்.. நாளை இறுதியாகும் லிஸ்ட்! கோட்டையைப் பிடிக்க கோயல் போடும் கணக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து, பாஜக தேசிய தலைமை தேர்தல் பணிகளை வேகப்படுத்த தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் மூன்று பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஏற்கெனவே அமைக்கப்பட்ட நிலையில், அவர் நாளை (ஜனவரி 21) மூன்று நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இந்த வருகையின் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையிலும், முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் முன்கூட்டியே தேர்தல் தயாரிப்புகளில் தீவிரம் காட்டி வருகின்றன. பிரசாரத் திட்டங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.

Piyush Goyal NDA Tamil Nadu Assembly Election 2026

தற்போதைய சூழலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பாலும் வடிவம் பெற்றுவிட்டதாக கூறப்படும் நிலையில், அதிமுக - பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மட்டும் இன்னும் சில குழப்பங்கள் நீடித்து வருகின்றன.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026

குறிப்பாக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களாக நீடித்ததால், கூட்டணி இறுதி முடிவை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், அவர்களை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சி மேற்கொண்டது. ஆனால், அந்த முயற்சிகளும் இதுவரை இறுதி முடிவை எட்டவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி

இந்தச் சூழ்நிலையில்தான், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அனுபவம் கொண்ட தலைவராக பியூஷ் கோயலுக்கு தமிழக தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் ஏற்கெனவே சென்னை வந்த போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன் பிறகே அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுகள் வேகம் பெற்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையும் இந்தப் பணிகளை மேலும் துரிதப்படுத்தியது. அதன் விளைவாக, அதிமுக-பாமக கூட்டணி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பியூஷ் கோயல்

இதற்கிடையே மூன்று நாள் பயணமாக தமிழகம் வரும் பியூஷ் கோயல், பாமக, தமாகா உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஏற்ற வகையில் தொகுதி ஒதுக்கீட்டை இறுதி செய்வதே அவரது வருகையின் முக்கிய நோக்கமாக இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வரும் ஜனவரி 23-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேச உள்ளார்.

தமிழ்நாடு வருகை

இந்தக் கூட்டம், 2026 தேர்தலுக்கான பாஜக தலைமையிலான கூட்டணியின் முதல் பெரிய அரசியல் மேடையாக பார்க்கப்படுகிறது. எனவே, அந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஒரே மேடையில் ஒன்றிணைத்து, கூட்டணியின் பலத்தை வெளிப்படுத்த பியூஷ் கோயல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் விழா ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்யவும் உள்ளார். அதேநேரத்தில், பிரதமர் மோடி வருகைக்கு முன்னதாக, ஜனவரி 22-ஆம் தேதியே கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொகுதி பங்கீடு

திமுக அரசுக்கு எதிரான தேர்தல் வியூகங்களை வகுப்பதோடு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைந்த பலத்தை நிரூபிக்கும் முயற்சியாக பியூஷ் கோயல் வருகை அமையும் என பாஜக தரப்பினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், பியூஷ் கோயல் நேற்று மாலை டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தமிழக பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பாஜக தேர்தல் வியூகம்

இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு, பிரதமர் மோடியின் தமிழக வருகை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+