’ஸ்பாய்லர்’ விஜய்.. பாஜக கூட்டத்தில் டோனை மாற்றிய பியூஷ் கோயல்! தமிழக ‘தாமரைகளுக்கு’ பறந்த உத்தரவு!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஷ் கோயல் நேற்று முதல் முறையாக தமிழகம் வந்தார். நேற்று தமிழக அரசியல் சூழல் குறித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேசிய, மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. அதில் விஜய் குறித்து முக்கியமாக சில விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. வரும் பிப்ரவரி மாதத்தில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், கட்சிகளின் தலைமை மட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், தமிழக பா.ஜனதா கட்சியின் தேர்தல் தயாரிப்புகள் தொடர்பாக, தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனைக்காக பியூஷ் கோயலும், இணை பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மேக்வாலும் சென்னை வந்தனர்.

2026 சட்டமன்ற தேர்தல்
தியாகராய நகரில் உள்ள பா.ஜனதா மாநில தலைமையகத்தில் நடைபெற்ற இந்த மையக்குழு கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் எச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
பாஜக தேர்தல் திட்டம்
குறிப்பாக திமுக, அதிமுக, பாமக, தேமுதிக மற்றும் தமிழக வெற்றி கழகம் போன்ற கட்சிகளின் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து பியூஷ் கோயல் நிர்வாகிகளிடம் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர விருப்பம் கொண்டுள்ள பிற கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் குறித்தும் கூட்டத்தில் முக்கியமாக பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பியூஷ் கோயல் தமிழ்நாடு
விஜய் நடத்தி வரும் அரசியல் கூட்டங்கள், அதற்கு மக்கள் தரும் வரவேற்பு, இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு உள்ளிட்ட விவரங்களை பியூஷ் கோயல் விரிவாக கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, விஜயின் அரசியல் வருகை, திமுகவின் வாக்கு வங்கியில், குறிப்பாக சிறுபான்மை வாக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பா.ஜனதா தரப்பில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. இந்த சூழலில் தான், தமிழக பா.ஜனதா நிர்வாகிகளுக்கு பியூஷ் கோயல் ஒரு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயை விமர்சிக்க வேண்டாம்
அதன்படி, கட்சி பொதுக்கூட்டங்களிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ, நடிகர் விஜய்க்கு எதிராக எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்க வேண்டாம் என்று அவர் கட்டுப்பாடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜயை விமர்சிப்பது அல்லது தாக்கும் வகையிலான பேச்சுகள், தற்போதைய அரசியல் சூழலில் தேவையில்லை என்பதே இந்த அறிவுறுத்தலின் பின்னணி என கூறப்படுகிறது. விஜயின் அரசியல் செயல்பாடுகள் திமுகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பா.ஜனதா கருதுவதால், அவரை நேரடியாக எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் அரசியல்
மேலும், விஜய் எந்த கூட்டணியில் இருந்தாலும், அவரது அரசியல் நகர்வுகள் திமுகவுக்கு சவாலாக அமையும் என்பதால், பா.ஜனதா தரப்பில் அமைதியான அணுகுமுறை பின்பற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, பா.ஜனதா நிர்வாகிகள் யாரும் விஜய்க்கு எதிராக பேசக் கூடாது என்றும், சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடும்போது கூட கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேவையற்ற சர்ச்சைகள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்த கட்டுப்பாட்டின் முக்கிய நோக்கம் எனவும் கூறப்படுகிறது.
-
விஜய் பெயரளவில் தான் கிறிஸ்தவர்.. சொந்த குடும்பத்தையே காப்பாற்ற முடியாதவர்.. அருட்தந்தை விமர்சனம்! -
எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள் -
கலைஞரே 2 தொகுதில போட்டி போட்டு இருக்கார்.. யூடியூபர் பிரசாந்த் சொன்ன புது மேட்டர்.. உண்மை என்ன? -
பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்க்கும் திலகபாமா? அன்புமணி முடிவுக்கு பின் என்ன காரணம்? -
குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல் -
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. கொளத்தூரில் விஜய் பேச்சு -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
"அன்புதானே எல்லாம்" ராமதாஸுக்கே அறிவுரை கூறிய பெரம்பூர் பாமக வேட்பாளர்! யார் இந்த திலகபாமா? -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
திருச்சி கிழக்கில் தேர்தல் அலுவலகம் கூட அமைக்காத தவெக.. 25 நாட்களில் விஜய்யால் மாற்றிவிட முடியுமா? -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்!












Click it and Unblock the Notifications