பத்திரப்பதிவு செய்ய போறீங்களா? மார்ச் 28 அலுவலகங்கள் இயங்குமா? தமிழக அரசு முடிவு பற்றி ரகசிய கடிதம்
சென்னை: தமிழகத்தில் அஷ்டமி மற்றும் நவமி தினங்களால் பத்திரப்பதிவு குறைய வாய்ப்புள்ள நிலையில், பொதுமக்களின் வசதிக்காக வரும் மார்ச் 28 சனிக்கிழமை அன்று சார் பதிவாளர் அலுவலகங்களை இயக்கக் கோரி அரசுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம் எழுதியுள்ளார். நிதி ஆண்டு முடிவடைவதைக் கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள பதிவுகளை மேற்கொள்ளவும் அரசின் வருவாயைப் பெருக்கவும் இந்த சிறப்பு அனுமதியை வழங்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுப் பாதைக்காக நிலத்தை தானமாக வழங்க முன்வரும் மக்கள் எதிர்கொள்ளும் பதிவுத்துறை சிக்கல்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் இதற்காக முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு, தமிழக பதிவுத்துறை தலைவருக்கு அவசர கடிதம் ஒன்றை கடந்த வாரம் எழுதியிருந்தது.

அந்த கடிதத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளைநிலங்களுக்கான இடுபொருள்களைக் கொண்டு செல்லவும், விளைபொருட்களைச் சந்தைப்படுத்தவும் ஏதுவாகப் பொதுப் பாதைகள் அமைப்பதற்காகப் பொதுமக்கள் தாமாக முன்வந்து வழங்கும் நிலங்களைத் தான செட்டில்மென்ட் (Gift Deed) பத்திரமாகப் பதிவு செய்வதில் நிலவும் சிக்கல்களைத் தீர்க்கக் கோரியிருந்தது.
டிடிசிபி (DTCP) அங்கீகாரம் இல்லாத கிராமப்புற மற்றும் நகர்ப்புற நிலங்களைப் பொதுப் பாதைக்காகத் தானமாக வழங்கும் போது, உள்ளாட்சி அமைப்புகளிடம் தடையின்மை சான்று (NOC) பெற வேண்டும் எனக்கூறி சார் பதிவாளர்கள் அந்தப் பத்திரங்களைப் பதிவு செய்ய மறுப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதால், இத்தகைய தான செட்டில்மென்ட் ஆவணங்களை எவ்விதத் தடையுமின்றி பதிவு செய்வதற்கு ஏதுவாகப் பதிவுத்துறை சார்பில் முறையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை விரைந்து வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் ஒரு கோரிக்கையை அரசுக்கு விடுத்துள்ளார் டாக்டர் ஹென்றி. தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் அவர்களுக்கு பொதுமக்களின் நலன் கருதி எழுதியுள்ள அந்த கடிதத்தில் உள்ள விவரம் இதுதான்.
"எதிர்வரும் 26.03.2026 வியாழன் மற்றும் 27.03.2026 வெள்ளிக்கிழமை அஷ்டமி மற்றும் நவமி என்பதால் இந்த இரு நாட்களிலும் பெரும்பான்மையான மக்கள் சுப காரியங்கள் தொடங்குவதை தவிர்த்து விடுவார்கள். உதாரணமாக மேற்கண்ட தினங்களில் பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்கள் தங்களது சொத்துக்களை வாங்கவோ அல்லது விற்கவோ விரும்ப மாட்டார்கள்.
எனவே தமிழ்நாட்டில் பெரும்பாலான சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பணிகள் மிக சொற்ப அளவில் நடைபெறுவது வழக்கம். இதனால் பதிவுத் துறையின் வாயிலாக அரசுக்கு வர வேண்டிய வருவாயும் பெருமளவில் தடைப்படும். மேலும் 2025-26-ஆம் நிதி ஆண்டு வருகிற மார்ச் 31.03.2026 ஆம் தேதி முடிவடைவதால் அதிக அளவில் பத்திர பதிவுகள் நடைபெற கூடுதல் வாய்ப்புள்ளது.
ஆகவே பதிவுத்துறை தலைவர், மேற்கண்டவைகளை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு எதிர்வரும் 28.03.2026 சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளும் வகையில் உரிய ஆவண செய்வதன் மூலம் பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்கள் தங்களது சொத்துக்களை பதிவு செய்து மகிழ்வுறுவதுடன், மேற்கண்ட தினங்களில் அரசுக்கு வராமல் தடைப்பட்ட வருவாயையும் ஈடு செய்யும் வகையில் பயனுள்ளதாக அமையும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் டாக்டர் ஹென்றி.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications