கிஸ்ஸை பாலியலா மாத்தாதீங்க! ராகுல் காந்தியை சாடிய ஸ்மிருதி இரானிக்கு காங்கிரஸ் பெண் நிர்வாகி அட்வைஸ்
சென்னை: மக்களவையில் ராகுல் காந்தி ஃபிளையிங் கிஸ் கொடுத்ததை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ள நிலையில், முத்தத்தை பாலியல்படுத்த வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் லட்சுமி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான 2 வது நாள் விவாதம் நடைபெற்றது. நேற்று பேசாத ராகுல் காந்தி இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எழுந்து பேசினார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அவர் மிகவும் ஆவேசமாக உரையாற்றினார்.

நான் மணிப்பூருக்கு சென்றேன். நமது பிரதமர் இன்று வரை மணிப்பூருக்கு செல்லவில்லை. அவர்களை பொருத்தவரை மணிப்பூர் இந்தியாவில் இல்லை. அவர்கள் மணிப்பூரை இரு துண்டாக உடைத்து உள்ளார்கள். மணிப்பூர் இன்னும் அமைதியாகவில்லை என்பதே எதார்த்தம். மணிப்பூரில் அவர்கள் இந்தியாவை கொன்றுவிட்டார்கள். நீங்கள் இந்தியாவின் பாதுகாவலர் இல்லை. இந்தியாவை கொன்றவர்கள் நீங்கள்.
மணிப்பூரில் இந்தியாவின் குரலை கொன்றுவிட்டீர்கள். மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள். பாரதம் என்பது என்னுடைய தாய். எனது தாயை நீங்கள் கொலை செய்து உள்ளீர்கள். முதலில் மணிப்பூர். தற்போது அரியானா. நீங்கள் நாடு முழுவதும் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்தீர்கள். தற்போது அது தீப்பிடித்து எரிகிறது." என்றார்.
ராகுல் காந்தி பேசி முடித்தவுடன் மக்களவையில் பிளையிங் கிஸ் கொடுத்து அங்கிருந்து சென்றார். இதனை தற்போது கையில் எடுத்து உள்ளார்கள் பாஜக எம்பிக்கள். இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் இதனை கண்டித்து உள்ளார். "பெண்கள் மீது வெறுப்பு கொண்ட நபரால்தான் இப்படி செய்யவும். இதுபோன்ற கண்ணியம் குறைவான செயலை நான் இதுவரை நாடாளுமன்றத்தில் பார்த்ததே இல்லை." என்றார்.
அவரது இந்த நடவடிக்கை அநாகரிகமானது என மத்திய அமைச்சர் சோபா புகாரளித்து உள்ளார். ஸ்மிருதி இரானி தலைமையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ராகுல் காந்தியின் இந்த செயல் குறித்து புகாரளித்து உள்ளார்கள். இந்த நிலையில் ஸ்மிருதி இரானிக்கு ட்விட்டரில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் லட்சுமி ராமச்சந்திரன் ஆலோசனை வழங்கி உள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, "தயவு செய்து முத்தத்தை பாலியில் சேர்க்காதீர்கள் மேடம்! நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுப்போம். வயதில் மூத்தவர்களுக்கு முத்தம் கொடுப்போம். அனைத்து பாலினத்தை சேர்ந்த நண்பர்களுக்கும் முத்தம் கொடுப்போம். எங்கள் சகோதரர்கள், சகோதரிகள், கணவன், மனைவி என அனைவருக்கும் முத்தம் கொடுப்போம். எங்களின் உணர்வுகள் தூய்மையானவை. வளருங்கள். முடிந்தால் வேறு ஏதாவது தவறை கண்டுபிடியுங்கள்." என்று தெரிவித்து உள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications