பிஎம் கிசான் ₹2,000 வராதா? இந்த 1 முக்கிய காரணத்தால் லட்சக்கணக்கானோரின் Payment நிறுத்தம்
சென்னை: மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமான பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது.. ஆனால், சமீபகாலமாக பல விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு இந்த 2,000 ரூபாய் பணம் வருவதில்லை என்ற புகார் பரவலாக எழுந்து வருகிறது.. இதற்கான காரணங்கள் என்ன, உங்கள் பணம் ஏன் வரவில்லை, அதை எப்படி சரி செய்வது என்பதைப் பற்றிப் பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இங்கே சுருக்கமாக பார்ப்போம்..
முதலாவதாக, இ-கேஒய்சி (e-KYC) எனப்படும் மின்னணு முறைப்படி உங்கள் விவரங்களைச் சரிபார்க்காமல் இருப்பதுதான் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது..

மத்திய அரசு தற்போது இந்த நடைமுறையை முழுமையாகக் கட்டாயமாக்கியுள்ளது.. உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபி மூலம் அல்லது உங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையங்கள் வழியாக இந்த இ-கேஒய்சி முறையை நீங்கள் முடிக்க வேண்டும்.. இதைச் செய்யாதவர்களின் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டு, பணம் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது..
பணம் வராமல் போவதற்கு காரணங்கள்?
இரண்டாவதாக, ஆதார் மற்றும் வங்கி கணக்கு தகவல்களில் இருக்கும் முரண்பாடுகள் பெரும் சிக்கலை ஏற்படுத்துகின்றன.. விவசாயிகளின் பெயர் ஆதார் அட்டையில் எப்படி இருக்கிறதோ, அதேபோலவே வங்கி கணக்குப் புத்தகத்திலும் இருக்க வேண்டும்..
ஒரு சின்ன எழுத்துப் பிழை அல்லது இனிஷியல் மாறுபாடு இருந்தால் கூட கம்ப்யூட்டர் மூலம் சரிபார்க்கும் போது உங்கள் பெயர் நிராகரிக்கப்படும்.. மேலும், உங்கள் ஆதார் எண் வங்கி கணக்குடன் முறையாக இணைக்கப்பட்டு, Direct Benefit Transfer (DBT) வசதி செயல்பாட்டில் இருக்க வேண்டியது கட்டாயம்..
நிலம் சரிபார்ப்பு
மூன்றாவதாக, நில ஆவணங்கள் சரிபார்ப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.. Land Seeding எனப்படும் இந்தச் செயல்பாட்டின் மூலம், தகுதியுள்ள விவசாயியின் பெயரில் உண்மையிலேயே நிலம் இருக்கிறதா என்பது ஆன்லைன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.. உங்கள் விவரங்களில் இந்த நிலச் சரிபார்ப்பு "No" என்று இருந்தால், உங்களுக்கு அடுத்த தவணை பணம் கிடைக்காது..
நான்காவதாக, தகுதியற்ற பயனாளிகள் லிஸ்ட்டில் உங்கள் பெயர் இடம் பெற்றிருக்கலாம்.. அரசு அவ்வப்போது தகுதியற்ற நபர்களைக் கண்டறிந்து பட்டியலிலிருந்து நீக்கி வருகிறது.. குறிப்பாக வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் குறிப்பிட்ட நில அளவுக்கு மேல் வைத்திருப்பவர்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கான நிதி உதவி நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது..
எப்படி மீண்டும் பணம் பெறுவது
உங்கள் பணம் நிறுத்தப்பட்டிருந்தால் கவலைப்படத் தேவையில்லை.. அதனை மீண்டும் பெற சில எளிய வழிமுறைகள் உள்ளன.. முதலில் பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று 'Know Your Status' என்ற பகுதியைத் தேர்வு செய்து உங்கள் நிலையைச் சரிபார்க்கவும்.. அங்கு இ-கேஒய்சி மற்றும் லேண்ட் சீடிங் ஆகியவை 'Yes' என்று இருக்கிறதா என்று பாருங்கள்..
ஒருவேளை இ-கேஒய்சி செய்யப்படவில்லை என்றால், உடனடியாக ஆன்லைன் மூலமாகவோ அல்லது இ-சேவை மையம் மூலமாகவோ புதுப்பித்துக் கொள்ளுங்கள்..
அதேபோல், உங்கள் வங்கிக்கு நேரில் சென்று உங்கள் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கக் கோரிக்கை விடுங்கள்.. நில ஆவணங்கள் தொடர்பான பிரச்சனை இருந்தால், உங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரை (VAO) அணுகி உங்கள் பட்டா மற்றும் நில விவரங்களை ஆன்லைனில் சரியாகப் பதிவேற்றம் செய்யச் சொல்லுங்கள்.. இதனைச் சரியாக செய்து முடித்தால், வராத முந்தைய தவணைப் பணத்தையும் சேர்த்து உங்கள் கணக்கில் பெற முடியும்
முக்கியமான புதிய விதிமுறை:
இதற்கு மாற்றாக மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள புதிய விதிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.. இனி ஒரு விவசாயக் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவர் மட்டுமே இந்த 2,000 ரூபாயைப் பெற முடியும் என்ற கட்டுப்பாடு தீவிரமாக்கப்பட்டுள்ளது.. தகுதியுள்ள விவசாயிகள் தங்களது நில விவரங்களை வருவாய்த் துறை மூலம் முறைப்படி சரிபார்க்கவில்லை என்றாலும் இனி வரும் தவணைகள் நிறுத்தப்படும்.. எனவே, உரிய நேரத்தில் உங்கள் ஆவணங்களைப் புதுப்பித்து வைப்பது உங்கள் நிதி உதவியைத் தொடர்ந்து பெறுவதற்கு வழிவகுக்கும்..!!












Click it and Unblock the Notifications