PM கிசான் 21வது தவணை.. ரூ.2000 நவம்பரிலேயே வருகிறதா? யாருக்கு பணம் கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது?
சென்னை: இந்திய விவசாயிகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் 'பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி' திட்டத்தின் 21வது தவணை விரைவில் வர இருக்கிறது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கும் இந்த ரூ.2,000 தொகை நவம்பர் மாதத்தின் முதல் பாதிக்குள் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வ நாள் இதுவரை அரசு வெளியிடவில்லை. பீகார் தேர்தல் காரணமாக இந்த விடுவிப்பதில் தாமதம் என கூறப்பட்ட நிலையில், அடுத்த வாரம் வெளியாகலாமென கூறப்படுகிறது.
விவசாயிகள் நலனுக்காக 2019 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட 'பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி' திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நான்கு மாதத்திற்கும் ரூ.2,000 என விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இதுவரை 20 தவணைகளாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், கடைசியாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் 20வது தவணை நிதியை உத்தரப் பிரதேசம், வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

பிஎம் கிசான்
இந்நிலையில் 21வது தவணை நிதி எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது. அந்த வகையில், ரூ.2,000 தொகை நவம்பர் மாதத்தின் முதல் பாதிக்குள் வங்கி கணக்கில் வரலாம் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், தவணை வரும் முன் விவசாயிகள் தங்கள் பெயர் பட்டியலில் சரியாக உள்ளதா, e-KYC முடித்திருக்கிறார்களா என்பதை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் e-KYC செய்யாதவர்களின் பெயர் நன்மை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, தவணை பணம் தாமதமாகவோ அல்லது வராமலோ போகும் அபாயம் உள்ளது.
21வது தவணை
தங்களது பெயரில் விவசாய நிலம் வைத்திருக்கும் குடும்பம் என்றால் யாரும் இந்த திட்ட பயனாளராக இருக்கலாம். நில அளவு எவ்வளவு என்பது முக்கியமில்லை. முன்பு இரண்டு ஹெக்டேர் என நிபந்தனை இருந்தாலும், தற்போது சிறு, குறுச்சிறு விவசாயிகள் உட்பட எல்லா நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் இந்த திட்டம் வழங்கப்படுகிறது. ஆனால் சிலர் இந்த திட்டத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளட்னர். அரசில் உயர் பதவி வகித்தவர்கள், எம்எல்ஏ, எம்பி, மேயர் போன்றவர்கள், வருமான வரி கட்டுபவர்கள், அரசு ஊழியர்கள் (கிளாஸ் IV தவிர), ஓய்வூதியம் ரூ.10,000-க்கு மேல் பெறுபவர்கள், டாக்டர், என்ஜினீயர், வக்கீல், சார்ட்டேட் அக்கவுண்டெண்ட் போன்ற தொழில்முறை நபர்களுக்கு இந்த உதவித் தொகை கிடைக்காது.
விவசாய உதவி தொகை
சில மாநிலங்களில் தற்போது தேர்தல் அறிவிப்பு அமலில் இருந்தாலும், இது புதிய திட்டம் அல்ல; ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டம் என்பதால் தவணை வழங்குவதில் பிரச்சினை இல்லை. எனவே நடைமுறை முடிந்தவுடன் வழக்கம்போல பணம் கணக்கில் வரலாம். இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட 8.55 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசு முன்கூட்டியே 21வது தவணையை வழங்கிவிட்டது. ரூ.171 கோடி நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் சென்றுவிட்டது.
e-KYC கட்டாயம்
சரி விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற e-KYC எப்படி செய்யலாம்? எனப் பார்க்கலாம். விவசாயிகள் e-KYC செய்ய மூன்று வழிகள் உள்ளன. அதன்படி, ஓடிபி மூலம் இணையதளத்திலும், அருகிலுள்ள CSC மையத்தில் கைரேகை மூலமும், ஆதார் முக அடையாளம் மூலமும் e-KYC செய்யலாம். புதியவர்கள் அதிகாரப்பூர்வ தளமான pmkisan.gov.in-ல் சென்று புதிய பதிவு செய்து விவரங்களை நிரப்பினால் போதும். இவர்களுக்கு ஒவ்வொரு நான்கு மாதத்துக்கும் ரூ.2,000 என வருடத்திற்கு ரூ.6,000 நேரடி நிதி உதவியாக கிடைக்கும்.
நவம்பர் ரூ2000 உதவி
21வது தவணை இன்னும் சில நாட்களில் வரக்கூடும். அதுவரை விவசாயிகள் தங்கள் நிலை, KYC நிலை, வங்கி விவரங்களை சரிபார்த்து வைத்துக்கொள்ள வேண்டும். சிறு விவசாயிகளுக்கு இது ஒரு நம்பிக்கையாக இருப்பதால், அரசு விரைவில் அதிகாரப்பூர்வ தேதியையும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications